சிவகங்கை மாவட்டம் மானகிரி பகுதியை சேர்ந்தவர் சேர்ந்தவர் 52 வயதுடைய ராமகிருஷ்ணன். இவர் ஜோதிடம் மற்றும் தோஷம் கழிப்பது போன்ற பரிகார பூஜைகளை தொழிலாக செய்து வந்தார். இவரிடம் கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஒரு தாய் தன்னுடைய 18 வயது மற்றும் 14 வயதுடைய இரண்டு குழந்தைகளை அழைத்துக் கொண்டு ஜோதிடம் கேட்க சென்றிருக்கிறார். அவர் தன்னுடைய குழந்தைகள் சரியாக படிக்கவில்லை என்றும் அதற்கு பரிகாரம் செய்யும்படியும் கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து ராமகிருஷ்ணன் அந்த தாயிடம் இரண்டு குழந்தைகளையும் மானகிரியில் உள்ள தன்னுடைய வீட்டுக்கு பரிகார பூஜை செய்வதற்காக அழைத்து வரும்படி கூறியுள்ளார். இதை நம்பிய அந்த தாயார் தன்னுடைய இரண்டு குழந்தைகளையும் ஜோதிடர் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்பொழுது தாயை ஒரு அறையில் தனியாக இருக்கும்படி கூறிவிட்டு அந்த இரண்டு குழந்தைகளையும் பூஜை செய்வதாக தனியாக ஒரு அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.
பின்னர் இந்த தகவலை யாருக்கும் சொல்லக்கூடாது என்றும் அவ்வாறு சொன்னால் அவர்களின் தாய் மற்றும் தந்தை இறந்து விடுவார்கள் என்றும் கூறி மிரட்டியுள்ளார். இதை கேட்டு பயந்து போன இரண்டு குழந்தைகளும் யாரிடமும் சொல்லாமல் இருந்துவிட்டனர். பின்னர் சுமார் இரண்டு வருடங்கள் கழித்த நிலையில் இரண்டு குழந்தைகளுக்கும் உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டது அப்போது அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற பொழுது அவர்களுக்கு பால்வினை நோய் இருப்பது தெரிய வந்தது.
எனவே அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் மற்றும் மருத்துவர்கள் இது குறித்து விசாரித்த பொழுது ஜோதிடர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் தெரியவந்தது. தொடர்ந்து இது குறித்து அவர்களின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் திருப்பத்தூர் அனைத்து மாநகர காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து ஜோதிடர் ராமகிருஷ்ணனை கைது செய்து அவர் மீது சிவகங்கையில் உள்ள போக்சோ விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரணை செய்த நீதிபதி கோகுல் முருகன் குற்றம் சாட்டப்பட்ட ஜோதிடர் ராமகிருஷ்ணனுக்கு. ஒரு சிறுமியை பாலியல் பலாத்காரம் கொடுத்த வழக்கில் நூறாண்டுகள் வீதம் இரண்டு பேருக்கு 200 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்தார். அத்துடன் அபராதமாக தலா ரூ 1 லட்சம் வீதம் ரூ 2 லட்சம் அபராதம் விதித்தார். மேலும் பாதிக்கப்பட்ட இரண்டு சிறுமிக்கும் தலா 10 லட்சம் வீதம் ரூ ரூ 20 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிட்டார்.
போக்சோ நீதிமன்றம் தொடங்கப்பட்டு சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்ட நிலையில் தற்போது தான் முதல் முறையாக அதிகபட்ச தண்டனையாக ஒரு குற்றவாளிக்கு 200 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் மீது இதேபோல் மற்றொரு வழக்கு உள்ளது அந்த வழக்கில் இன்று ( 24ம்தேதி) தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்தார். 200 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்ட ஜோதிடர் ராமகிருஷ்ணன் கடந்த 2022 ஆம் ஆண்டிலிருந்து மதுரை மத்திய சிறையில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.