“சிறுமியை கொன்று பிளாஸ்டிக் கவரில் சுற்றிய கொடூரம்” - கோவில் அருகே வீசப்பட்ட சடலம்… வடமாநில தொழிலாளி செய்த வெறிச்செயல்!

“சிறுமியை கொன்று பிளாஸ்டிக் கவரில் சுற்றிய கொடூரம்” - கோவில் அருகே வீசப்பட்ட சடலம்… வடமாநில தொழிலாளி செய்த வெறிச்செயல்!

இஜாமுல் வீட்டிற்கு அருகில் உள்ள வீட்டில் தங்கி வேலை செய்து வந்திருக்கிறார்...
Published on

மேற்கு வங்கம் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி இஜாமுல் ஷேக் இவருக்கு திருமணமாகி 6 வயதில் ஒரு பெண் குழந்தை இருந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கர்நாடக மாநிலம், பெங்களூரு மாவட்டம் வைட் பில்ட் அடுத்துள்ள நல்லுருஹள்ளி கிராமத்திற்கு குடிபெயர்த்துள்ளார். பின்னர் இஜாமுல் ஷேக் அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் நிலையில் அவரது மனைவியும் அதே நிறுவனத்தில் வேலை செய்து வருவதாக சொல்லப்படுகிறது.

அதனை தொடர்ந்து இஜாமுல் ஷேக் சொந்த ஊரான மேற்கு வங்கத்தில் அவருக்கு தெரிந்த நபரான யூசெப் என்பவரும் நல்லுருஹள்ளி பகுதிக்கு வேலை வந்திருக்கிறார். எனேவ இஜாமுல் வீட்டிற்கு அருகில் உள்ள வீட்டில் தங்கி வேலை செய்து வந்திருக்கிறார். இருவரும் ஒரே ஒற்றை சேர்ந்தவர்கள் என்பதால் நண்பர்கள் போல பழகி வந்த நிலையில் யூசெப் அடிக்கடி இஜாமுல் ஷேக் வீட்டிற்கு சென்று வருவதை வழக்கமாக வைத்திருந்ததாக சொல்லப்படுகிறது.

அது போல கடந்த சில வாரங்களுக்கு முன்பு யூசெப் இஜாமுல் வீட்டிற்கு செல்லும் பொது இஜாமுல் மனைவிக்கும் யூசெப்பிற்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில் அது குறித்து இருவரும் அவ்வப்போது சண்டையிட்டு வந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த யூசெப் பழிவாங்க நினைத்து நேற்று முன்தினம் மாலை தனது வீட்டுக்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த இஜாமுல் ஷேக்கின் 6 வயது மகள் ஷனாத்தை பேசி ஒதுக்கு புறமாக அழைத்துச் சென்றிருக்கிறார்.

பின்னர் சிறுமியை சரமாரியாக தாக்கி கழுத்தை நெரித்து கொலை செய்து அருகில் இருந்த பிளாஸ்டிக் கவரில் சிறுமியின் உடலை சுற்றி வைட் பில்ட் பகுதியில் உள்ள கோயிலுக்கு அருகில் வீசிவிட்டு சென்றிருக்கிறார். அதனை தொடர்ந்து இஜாமுல் தனது மகளை காணவில்லை என போலீசில் புகாரளித்தார். எனவே வழக்குப்பதிவு செய்த போலீசார் குழந்தையை தேடி நிலையில் கோவிலுக்கு அருகில் இருந்த சிறுமியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

அதனைத்தொடர்ந்து அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டதில் யூசெப் குழந்தையை அழைத்து சென்று கொலை செய்தது தெரியவந்தது. எனவே பதுங்கியிருந்த யூசேப்பை தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் நேற்று இரவு பெங்களுருவில் பாத்துக்கிருந்த அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். நண்பனின் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் நண்பனின் குழந்தையை கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com