தாய் இறந்த சோகத்தில் இருந்து மீளாமல் மகன் தற்கொலை !!!

தாய் இறந்த சோகத்தில் தாயை போலவே தானும் தீ வைத்து கொண்டு தற்கொலை செய்து கொண்ட மகன் ஒரே வீட்டில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு உயிரிழப்புகளால் சோகம்
தாய் இறந்த  சோகத்தில் இருந்து மீளாமல் மகன் தற்கொலை !!!
Published on
Updated on
1 min read

வடசென்னை புதுவண்ணாரப்பேட்டைகாவல் நிலையம் அருகே வசித்து வருபவர் அசோகன் அவரது மனைவி நாகேஸ்வரி(60) இவர்களுக்கு 34வயதில் நவீன் 32வயதில் விவேக் என இரூ மகன்களூம் உள்ள நிலையில் இரு மகன்களுக்கும் திருமணம் ஆகாமல் இருந்துள்ளது.மகன்களுக்கு விரைவில் திருமணம்செய்ய வேண்டுமென நாகேஸ்வரி அசோகனிடம் அடிக்கடி கேட்டு சண்டையிட்டு வந்துள்ளார்.

நேற்று ஒருகட்டத்தில் கணவன் மனைவி இருவருக்குள்ளும் இது தொடர்பாக பிரச்சனை ஏற்படவே நாகேஸ்வரி தனக்கு தானே தீ வைத்து கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்த நிலையில்,  தாயின்  இறுதிசடங்கு முடிந்த பின்பு நேற்றிரவு வீட்டில் இருந்த இளைய மகன் விவேக்  வீட்டில் இருந்து தனது இருசக்கர வாகனத்தை எடுத்து கொண்டு காசிமேடு துறைமுக காவல் நிலைய பின்புறம் வந்து, தனது வாகனத்தில் இருந்த பெட்ரோலை எடுத்து தரையில் அமந்தவாறு தனது தலையில் ஊற்றி கொண்டு தனக்கு தானே தீவைத்து தற்கொலை செய்து கொண்டார்.

காலை அவ்வழியாக சென்றவர்கள் காசிமேடு துறைமுக போலீசாருக்கு தகவல் அளிக்கவே போலீசார் உடலை கைப்பற்றிய போது அருகாமையில் விவேக்கின் செல்போனிற்கு அவரது தந்தை அசோகனிடமிருந்து  அழைப்பு வந்ததையடுத்து இறந்தது அசோக்  தான் என உறுதியானது இதனையடுத்து போலீசார் உடலை கைப்பற்றி அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தாய் இறந்ததை கண் எதிரே பார்த்து அந்த சோகத்தில்  இருந்து மீளாமல் மகனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. .

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com