“மாமனை கொன்ற மச்சான்” - தந்தையை கொன்றவரை 4 மாதம் காத்திருந்து பழிவாங்கிய மகன்.. திருப்பத்தூரில் நடந்த அடுத்தடுத்த கொலைகள்! 

கடந்த பிப்ரவரி மாதம் 17 ஆம் தேதி காந்திநகர் பகுதியில் உள்ள தனது வாழை தோட்டத்தில் இருந்த திம்மராயனை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றுள்ளார் சக்கரவர்த்தி.
thiruppathur murder
thiruppathur murder
Published on
Updated on
1 min read

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை வக்கணம்பட்டி பகுதியை சேர்ந்தவர் 42 வயதான சக்கரவர்த்தி. இவர் ராணுவத்தில் பணியாற்றி வந்த நிலையில் இவருக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். சமீபத்தில் இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்று தனது சொந்த ஊரில் வசித்து வந்துள்ளார்.

சக்கரவர்த்திக்கும் அவரது தாயின் தம்பியான 48 வயதானரியல் எஸ்டேட் தொழில் செய்யும் திம்மராயன் என்பவருக்கும்  சொத்து பிரச்சனை இருந்து வந்துள்ளது. திம்மராயனுக்கு திருமணமாகி பரத் என்ற மகனும் இரண்டு மகள்களும் இருந்த நிலையில், சக்கரவர்த்தி திம்மராயனை சொத்திற்காக கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.

அதன்படி கடந்த பிப்ரவரி மாதம் 17 ஆம் தேதி காந்திநகர் பகுதியில் உள்ள தனது வாழை தோட்டத்தில் இருந்த திம்மராயனை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றுள்ளார் சக்கரவர்த்தி. இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் பிப்ரவரி 23 ஆம் தேதி காட்டு பகுதியில் பதுங்கியிருந்த சக்கரவர்த்தியை கைது செய்தனர்.

சிறையில் இருந்த சக்கரவர்த்தி ஜாமீனில் வெளியே வந்த நிலையில் காஞ்சிபுரத்தில் தங்கி அவ்வபோது சொந்த ஊருக்கு சென்று வந்துள்ளார். இதனை நோட்டமிட்ட திம்மராயனின் மகன் தனது தந்தையை கொலை செய்த சக்ரவர்த்தியை பழி வாங்க முடிவு செய்துள்ளார்.

இந்நிலையில் இன்று  பொன்னேரியில் உள்ள கோயிலில் தனது மனைவியுடன் சாமி கும்பிட்டு விட்டு வெளியில் வந்த சக்கரவாதியை, காரில் சென்று தனது நண்பர்களுடன் சரமாரியாக வெட்டியுள்ளார் பரத். அப்போது அப்பகுதியில் இருந்த ரோந்து போலீசார் சக்கரவர்த்தியையும் அவரது மனைவியையும் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

தீவிர  சிகிச்சை அளிக்கப்பட்ட சக்கரவர்த்தியை மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், வேலூர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சக்கரவர்த்தி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை தேடி வந்த போலீசார் தனது பெரியம்மா வீட்டில் பதுங்கியிருந்த பரத் மற்றும் அவரது நண்பர்களை கைது செய்துள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com