ஓடும் ரயிலில் பெண்ணை கற்பழித்து கொன்ற குற்றவாளி தப்பி ஓட்டம்!! கிணற்றுக்குள் வைத்து பிடித்தது எப்படி??

இரவு 1.30 மணியளவில் சிறையிலிருந்து தப்பிய சி46 என்ற சீருடையை அணிந்திருந்ததாக கூறப்படுகிறது...
pc vikatan
pc vikatan
Published on
Updated on
1 min read

கடந்த 2011 -ஆம்  சௌமியா என்ற பெண் திருச்சியிலிருந்து சொனூர் சென்ற ரயிலில் பயணித்தார்.  அப்போது அதே ரயிலில் விருத்தாசலம் பகுதியை சேர்ந்த 30 வயதான கோவிந்த சாமியும் பயணித்துள்ளார். தனிமையில் இருந்த அந்த பெண்ணை கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

 திருச்சூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அதே ஆண்டு பிப்ரவரி 6-ம் தேதி மரணமடைந்தார். இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்ட கோவிந்தசாமிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கிடையே 2016-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் கோவிந்தசாமியின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது.

இந்த நிலையில் கோவிந்தசாமி சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்துள்ளார்.  இந்த நிலையில் கண்ணூர் மத்திய சிறைச்சாலையில் இருந்து சிறைக்கம்பிகள் உடைத்து தப்பி சென்றுள்ளார். இரவு 1.30மணியளவில் சிறையிலிருந்து தப்பிய  சி46 என்ற சீருடையை அணிந்திருந்ததாக கூறப்படுகிறது. காலையில் ஒவ்வொரு செல்லாக சென்று சோதனை செய்தபோதுதான் கோவிந்த சாமி சிறையிலிருந்து தப்பியது தெரியவந்துள்ளது.

உடனடியாக போலீசார் ரயில்வே, பேருந்து நிலையம் உள்ளிட்ட பல இடங்களில் சோதனை செய்துள்ளனர். ஒற்றை கை கொண்ட கோவிந்தசாமி  கண்ணூர் பைபாஸ் சாலையில் கறுப்பு நிற சட்டையும், கறுப்பு பேன்டும் அணிந்த ஒருவர் நடந்துசெல்வதை பொதுமக்கள் சிலர் பார்த்தனர். அவர் மீது சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து சிலர் அவரை  அழைத்தனர். இதற்கிடையே சாலையை குறுக்காக கடந்துசென்றார் அவர். இதையடுத்து 'எடா கோவிந்தசாமி' என சிலர் சத்தம் போட்டுள்ளனர்.

இதையடுத்து அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டு காம்பவுண்ட் சுவரை குதித்து தாண்டி ஓடினார் கோவிந்தசாமி. இதுபற்றி உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் அப்பகுதியில் சென்று சம்பந்தப்பட்ட வீட்டை சுற்றி வளைத்தனர். அப்போது ஒரு கிணற்றுக்குள் குதித்து பதுங்கினார் கோவிந்தசாமி. போலீஸார் அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தி கிணற்றுக்குள் பதுங்கியிருந்த கோவிந்தசாமியை கைது செய்தனர்.

பகல் நேரத்தில் கிணற்றுக்குள் இருந்துகொண்டு இரவு வேறு எங்காவது தப்பிவிடலாம் என கோவிந்தசாமி திட்டம்போட்டிருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவரை சிறைக்காவலில் எடுத்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். தப்பி ஓடிய குற்றாவளியை கிட்டத்தட்ட 6 மணிநேரம் கழித்து போலீசார் கைது செய்துள்ளனர். 

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com