தென் கரோலினாவைச் சேர்ந்த ஒருவர், தனது 14 வயது வளர்ப்பு மகளை, தாய்க்கு தெரிந்திருந்தும் பல ஆண்டுகளாகப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக வளர்ப்பு தந்தை குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
38 வயதான ஆண்ட்ரூ ஜோசப் மார்ட்டின் மீது, சிறாருடன் பாலியல் ரீதியான குற்றச் செயலில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயான 35 வயதான மிஸ்டி டேனியல் நோரிஸ், குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததாகவும், குழந்தையை சட்டவிரோதமாகப் புறக்கணித்ததாகவும் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர். ஜனவரி 2-ம் தேதி அவர்களின் வீட்டிற்கு காவல்துறை அதிகாரிகள் அழைக்கப்பட்டனர். அங்கு, "ஒரு இளம் சிறுமி சட்ட அமலாக்க அதிகாரிகளிடம் உதவி கோரியதை" அடுத்து அங்கு காவல்துறையினர் வந்தனர். இதைத் தொடர்ந்து, இந்தத் தம்பதியினர் மீதான விசாரணை தொடங்கப்பட்டது.
"மார்ட்டின் பல ஆண்டுகளாக அந்தச் சிறுமியைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதோடு, அந்த அருவருப்பான பாலியல் வன்கொடுமை குறித்து அமைதியாக இருக்குமாறும் அந்த சிறுமிக்கு அழுத்தம் கொடுத்ததையும் ஆதாரங்கள் காட்டுகின்றன," என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "மார்ட்டினுக்கு பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இடையே நடந்த பாலியல் உறவுக் குறித்து தனக்குத் தெரிந்திருந்தது" என பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் ஒப்புக்கொண்டதாக அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டது. காவல்துறை அதிகாரிகள் இந்த வழக்கை இன்னும் தீர விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து, நேர்காணல்களை நடத்தி, மேலும் ஆதாரங்களை காவல்துறையினர் சேகரித்து வருகின்றனர். மார்ட்டின் மீது மேலும் பல குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. தற்போது மார்ட்டின் காவல்துறை கண்காணிப்பில் உள்ளார். NPCC-யின் குழந்தை பாதுகாப்பு மற்றும் துஷ்பிரயோக விசாரணைப் பிரிவின் பொறுப்பாளரும், தற்காலிக தலைமை காவலர், இந்த அறிக்கைகள் "பலவிதமான அச்சுறுத்தல்களை எடுத்துக்காட்டுகின்றன, அவற்றில் பல பொதுமக்களின் பார்வைக்கு வராமல் இருக்கின்றன" என்று கூறப்பட்டுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.