
நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த சௌந்தர்யா என்ற பெண் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். தான் வேலை செய்யும் நிறுவனத்திற்கு அருகிலேயே தாது நபர்களுடன் வீடு எடுத்து தங்கி வசித்து வந்துள்ளார். அதே சமயம் சௌந்தர்யாவின் வீட்டுற்கு அருகில் நாகபட்டினத்தை சேர்ந்த தினேஷ் வீடு எடுத்து தங்கி வசித்து வந்துள்ளார். தினேஷுக்கு சௌந்தர்யாவிற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் காதலாக மாறியுள்ளது.
இருவரும் ஒருவருக்கு ஒருவர் கடந்த எட்டு வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் அவரது காதலை பற்றி பெற்றோர்களிடம் தெரிவித்த நிலையில் இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்து கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. பின்னர் வழக்கம் போல் இருவரும் அவர்களது அறையில் தங்கி பணிபுரிந்து வந்துள்ளனர். இந்நிலையில் சௌந்தர்யா வேறு ஒரு ஆண் நண்பருடன் பழகி வந்தது தினேஷுக்கு தெரியவந்துள்ளது.
இதனால் சௌந்தர்யாவை தினேஷ் பலமுறை கண்டித்துள்ளார். இருப்பினும் சௌந்தர்யா தன்னை மாற்றிக் கொள்ளாததாக சொல்லப்படுகிறது. தினேஷ் இதை பற்றி சௌந்தர்யாவிடம் வாக்குவாதம் செய்ததால் சௌந்தர்யா தினேஷின் எண்ணை பிளாக் செய்துள்ளார். எனவே ஆத்திரம் அடைந்த தினேஷ் நேற்று இரவு சௌந்தர்யாவின் அறையில் யாரும் இல்லாததை தெரிந்து கொண்டு அவரிடம் நேரில் சென்று வாக்குவாதம் செய்துள்ளார். இருவருக்கு இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் தினேஷ் சௌந்தர்யாவை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சௌந்தர்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சௌந்தர்யாவை கொலை செய்து தப்பி சென்ற தினேஷை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். காதலித்து நிச்சயம் செய்து கொண்ட பெண்ணை காதலன் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.