விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்த மாணவிகள்...

விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்த மாணவிகள்...
Published on
Updated on
1 min read

திண்டுக்கல் | சின்னாளபட்டியில் அரசு உதவி பெறும் தனியார் பெண்கள் உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் நேற்று ஒன்பதாம் வகுப்பு மாணவிகள் ஆசிரியர்கள் தங்களை தரக்குறைவாக திட்டியதாகவும் ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக கூறி பள்ளி, கழிவறையில் இருந்த பினாயிலை எடுத்து குடித்து தற்கொலைக்கு முயன்றனர். பின்னர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனை அடுத்து சம்பந்தப்பட்ட ஆசிரியர்களின் மீது நடவடிக்கை எடுக்க பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் சின்னாளப்பட்டி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

தகவல் அறிந்து வந்த திண்டுக்கல் மாவட்ட எஸ்பி பாஸ்கரன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்கள் மற்றும் உறவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் அடையச் செய்தனர். தொடர்ந்து புகார் மனு எழுதி கொடுக்கப்பட்டது.

அந்த புகார் மனுவில் சம்பந்தப்பட்ட பள்ளி மீதும் பள்ளி ஆசிரியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாநில எஸ்சி எஸ்டி ஆணையம் நேரில் வந்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.

இதனையடுத்து புகாருக்குள்ளான பள்ளியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர், சிறுபான்மைனர் அதிகாரிகள், நன்னடத்தை அலுவலர், வட்டாட்சியர் கால்துறை அதிகாரிகள் பள்ளியில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com