"மாட்டு சாணம்.. மனித மலம்..சாக்கடை" - மூன்றையும் சேர்த்து வீசி "சவுக்கு ஷங்கர்" வீடு சூறையாடல்! ஒரு தெருவே நாற்றத்தில் தத்தளிக்கும் கொடுமை!

வீட்டிற்குள் நுழைவதாக கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி என்று சிலவற்றை, தனது எக்ஸ் தள பக்கத்தில் சவுக்கு சங்கர் பதிவிட்டுள்ளார்.
savuku sankar
savuku sankar Admin
Published on
Updated on
1 min read

சென்னை, கீழ்ப்பாக்கம் பகுதியில் யூடியூபர் சவுக்கு சங்கர் வசித்து வருகிறார். யூடியூபில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக இவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட நிலையில், இவருக்கு எதிராக சில வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதனால் சவுக்கு சங்கரை போலீசார் சிறையில் அடைத்தனர். இதைத் தொடர்ந்து, ஜாமின் பெற்று இவர் வெளியே வந்தார்.

மேலும் படிக்க: இந்த லிங்கை கிளிக் பண்ணுங்க.. "மாலை முரசு" வழங்கும் IPL 2025-ன் "Special பரிசை வெல்லுங்க! இது நீங்க எதிர்பார்க்காத வேற லெவல் பரிசுங்க.. மிஸ் பண்ணிடாதீங்க!

எனினும், தொடர்ச்சியாக யூடியூபில் இவர் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், தூய்மைப் பணியாளர்கள் குறித்து அவதூறாக பேசியதாகக் கூறி இவர் வீட்டின் மீது இன்று (மார்ச் 24) காலை தாக்குதல் நடத்தப்பட்டது. இது குறித்த தகவலை சவுக்கு சங்கர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், "இன்று காலை 9.30 மணி முதல், துப்புறவு தொழிலாளிகள் என்று கூறிக் கொண்டு 50 பேர் கொண்ட கும்பல் நானும் என் தாயாரும் குடியிருக்கும் வீட்டின் மீது சராமரியாக தாக்குதல் நடத்தி வருகிறது.

மேலும் படிக்க: "கடைசியாக" தோனியைப் பார்த்த சந்தோஷம்.. 2 கல்லூரி மாணவர்களின் உயிரை பறித்த "எமன்"! நள்ளிரவில் நடந்த கொடூரம் 

நான் வெளியே கிளம்பிய 5 நிமிடத்தில் வந்த இந்த கும்பல், வீட்டின் கதவை உடைத்து, உள்ளே நுழைந்து, படுக்கையறை, சமையலறை, சமையல் பொருட்கள் என அத்தனை பொருட்களின் மீதும் சாக்கடையையும், மலத்தையும் கொட்டினர். என்ன நடந்தது என்று என் தாயாருக்கு போன் செய்தபோது அந்த போனை வாங்கி வீடியோ காலில் வந்து கொலை மிரட்டல் விடுத்தனர்.  

காவல் கட்டுப்பாட்டு அறைக்கு உடனடியாக தகவல் தெரிவித்தேன். ஒரே ஒரு உதவி ஆய்வாளரும், ஒரு காவலரும் மட்டும் வந்தனர். 9.30 மணி முதல் இதுவரை போராட்டம் நடத்தியவர்கள், அந்த இடத்தை விட்டு அகலவில்லை. அந்த இடத்திற்கு சென்ற ஊடகவியலாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். யாருடைய தூண்டுதலில் இந்தத் தாக்குதல் நடைபெறுகிறது என்பதை சொல்ல வேண்டியதில்லை" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.   

இது தவிர, போராட்டக்காரர்கள் வீட்டின் கதவை உடைத்து அவரது வீட்டிற்குள் நுழைவதாக கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி என்று சிலவற்றை, தனது எக்ஸ் தள பக்கத்தில் சவுக்கு சங்கர் பதிவிட்டுள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com