சென்னை அடுத்த செங்கல்பட்டு மாவட்டம் சிட்லபாக்கம் பகுதியில் அரசு சமூக நலத்துறை சார்பில் செயல்படும் பெண்கள் காப்பகத்தில் கள்ளக்குறிச்சியை சேர்ந்த மாணவியை அவரது தாய் கணவரை இழந்த நிலையில் இந்த காப்பகத்தில் கடந்த 3 ஆம் தேதி சேர்த்து விட்டு சென்றுள்ளார்.
இன்று அதிகாலை மாணவி மனைவி வலது கலீல் அடிபட்டதால் அள்ளுது கொண்டு இருந்துள்ளார். இதனை கவனித்த காப்பகத்தின் நிர்வாகிகள் அவரை மருத்துவமனையில் சேர்த்த நிலையில் அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள். அவருக்கு வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மாணவியிடம் இதைப்பற்றி மருத்துவர்களை கேட்டுள்ளனர். அதற்கு மாணவி “நேற்று இரவு தூங்கிக் கொண்டிருந்த போது தன்னை யாரோ வாயை பொத்தி தூக்கிச் சென்றதாகவும் பின்னர் தன்னை பாலியல் சீண்டல் செய்ததாகவும் அதற்கு ஒத்துழைக்க மறுத்ததால் தனது காலில் அடித்ததாகவும்” தெரிவித்துள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் போலீசுக்கு தகவல் அளித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில் காப்பகத்தில் காவலாளியாக பணிபுரியும் அதே பகுதியை சேர்ந்த மேத்யூ என்பவரை கைது செய்துள்ளார். விசாரணையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மேத்யூ சிறுமி தப்பிக்க முயன்ற போது அவரின் காலில் இரும்பு கம்பியால் அடித்தது தெரியவந்துள்ளது.
சிறுமியை மேல் சிகிச்சை மற்றும் மருத்துவப் பரிசோதனைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ள நிலையில், மேத்யூவை போக்சோ வழக்கின் கீழ் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி அவரையும் மருத்துவப்பரிசோதனைக்கு உட்படுத்தி உள்ளனர். மருத்துவ பரிசோதனை முடிந்த பிறகு மேத்யூ சிறையில் அடைக்கப்படுவார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.