“அப்பாவை அடிச்சி போட்டுட்டாங்க” - கணவனை அடித்து கொன்ற பெண்ணின் காதலன்… இரவு முழுவதும் காட்டுக்குள் தவித்த நான்கு வயது குழந்தை!

காந்தி ராசாத்தியிடம் விசாரித்த நிலையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு...
police recover body
police recover body
Published on
Updated on
2 min read

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதியை சேர்ந்தவர் காந்தி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ராசாத்தி என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு திருமணமாகி நான்கு வயதில் மகன் உள்ள நிலையில் குடும்ப கஷ்டத்திற்காக ஆந்திர மாநிலம், புங்கனூருக்கு அருகே உள்ள போயகொண்டா பகுதியில் உள்ள கோழிப் பண்ணையில் வேலைக்கு சேர்ந்துள்ளனர். குடும்பமாக கணவன் மனைவி இருவரும் குழந்தையுடன் அங்கேயே தங்கி பணிபுரிந்து வந்த நிலையில் ஒரு கட்டத்தில் அங்கு வேலையில்லாமல் கிடைக்கும் வேலையை செய்து மற்றவர்களிடம் சாப்பாடு வாங்கி சாப்பிட்டு வாழ்ந்து வந்திருக்கின்றனர்.

அப்போது அதே போல வாழ்ந்து வரும் நரசிம்மலு என்பவருடன் ராசாதிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தொடர்ந்து பழகி வந்த நிலையில் இவர்களது பழக்கமானது திருமணத்திற்கு மீறிய உறவாக மாற்றியுள்ளது. எனவே இருவரும் அடிக்கடி வெளியூர்களுக்குச் சென்று வந்த நிலையில் மனைவி ராசாத்தி மீது கணவனுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து காந்தி ராசாத்தியிடம் விசாரித்த நிலையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ராசாத்தி நரசிம்மலு உடன் சென்றிருக்கிறார்.

இதனால் வருத்தமடைந்த காந்தி தனது மகனை அழைத்து கொண்டு சொந்த குடியாத்தம் பகுதிக்கு சென்று வாழ்ந்த வந்த நிலையில் மனைவி மீது கோபம் தீர்ந்து கடந்த 10 தினங்களுக்கு முன்பு மனைவியுடன் சேர்ந்து வாழ மீண்டும் ஆந்திரா சென்று அங்கு மனைவியுடன் பேச்சுவார்த்தை செய்திருக்கிறார். அப்போது நரசிம்மலு மற்றும் ராசாத்தி சேர்ந்து காதலனுக்கு தடையாக உள்ள காந்தியை கொலை செய்ய திட்ட மிட்டுள்ளனர். அதன்படி கடந்த (ஏப் 05) தேதி மாலை நரசிம்மலு தனது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து காந்தியை மது அருந்த காட்டு பகுதிக்கு அழைத்து சென்றிருக்கின்றார்.

gandhi
gandhi

இந்த நிலையில் காந்தி தனது நான்கு வயது மகனையும் தன்னுடன் அழைத்து சென்ற நிலையில் இரவு அனைவரும் மது அருந்திவிட்டு திட்டமிட்ட படி காந்தியை அடித்து கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றிருக்கின்றனர். இதனால் இரவு முழுவதும் காட்டில் அள்ளுது கொண்டிருந்த சிறுவன் பக்கத்துக்கு ஊரில் சென்றி அங்கிருந்த அங்கன்வாடி உதவியாளரிடம் “அப்பாவை அடித்து போட்டுட்டாங்க” என குறி அழைத்து சென்றிருக்கின்றனர். பின்னர் இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கொலை செய்து விட்டு தப்பி சென்ற நரசிம்மலு மற்றும் ராசாத்தி உட்பட நான்கு பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். இதனை தொடர்ந்து தந்தையை இழந்த நான்கு வயது குழந்தை காப்பகத்தில் ஒப்படைக்கப் பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. மனைவியின் கள்ளக்காதலன் கணவனை அடித்து கொலை செய்த சம்பவம் மற்றும் காட்டு பகுதியில் நான்கு வயது சிறுவன் இரவு முழுவதும் தனியாக இருந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com