ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை...!

பள்ளிக்கல்வித்துறை முன்னாள் இயக்குநரும், ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளருமான ராமேஸ்வரம் முருகனின் பெற்றோர் வீட்டில் ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். 

தமிழக பள்ளி கல்வித்துறை முன்னாள் இயக்குநரும், தற்போதைய ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளருமான ராமேஸ்வரம் முருகன், குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார். இவர் ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளர் பதவி மற்றும் பள்ளி கல்வித்துறை இயக்குநராக இருந்த போது பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. 

அதனடிப்படையில், ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்பு ஆய்வாளர் ரேகா தலைமையில் 6 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார், வெள்ளாங்கோயிலில் உள்ள அவரது பெற்றோர் வீட்டில் அதிகாலை முதலே சோதனை செய்து வருகின்றனர். 

இதேபோல் ஈரோடு அக்ரஹார வீதியில் உள்ள நகைக்கடை உரிமையாளரும் ராமேஸ்வர முருகனின் மாமனாருமான அறிவுடைநம்பி என்பவரின் 7 க்கும் மேற்பட்ட வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை செய்து வருகின்றனர். 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com