3 மாணவர்களால்.. கூட்டாக சீரழிக்கப்பட்ட மாணவி! ஒவ்வொரு நண்பனையும் Message செய்து வீட்டிற்கு அழைத்த கொடூரம்

இரண்டாவது மாணவனும் குறுஞ்செய்தியில் கூறப்பட்ட இடத்திற்கு சென்று அந்தச் சிறுமியைத் பாலியல் ரீதியாக தாக்கியுள்ளார்.
Group sexual assault Sydney
Group sexual assault Sydney
Published on
Updated on
1 min read

17 வயதுடைய மூன்று சிறுவர்கள், ஒரு பதின்மவயது இளம் பெண்ணை கட்டாயப்படுத்தி கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்த அதிர்ச்சி சம்பவம் வெளிவந்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் ஆகஸ்ட் 16-ம் தேதி மாலையில் சிட்னியில், ஒரு பதின்மவயது சிறுவன் அந்த 18 வயதிற்குட்பட்ட சிறுமியை பல மணி நேரம் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது . இது தொடர்பாக 11 குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான அந்த தனியார் பள்ளி மாணவன், சம்பவம் நடப்பதற்கு முன்பு, அந்தச் சிறுமியை நட்பு ரீதியாக ஒரு கால்பந்து விளையாட்டுக்கும் அதன் பின்னர் மதுபானம் வாங்கிக்கொடுத்து அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதனால் சுயநினைவை இழந்த அந்த சிறுமியை அந்த மாணவன் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.

இதையடுத்து, அவரது ஒரு நண்பருக்குக் குறுஞ்செய்தி அனுப்புவதற்கு முன்பாக, ஒரு அறையில் அந்தப் பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக வெள்ளிக்கிழமை அன்று சிறுவர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர், அந்த முதல் மாணவன் தனது மற்றொரு நண்பனையும் இதில் சேருமாறு ஒரு குறுஞ்செய்தியை அனுப்பியுள்ளார், செய்தியை அறிந்து இரண்டாவது மாணவனும் குறுஞ்செய்தியில் கூறப்பட்ட இடத்திற்கு சென்று அந்தச் சிறுமியை பாலியல் ரீதியாக தாக்கியுள்ளார்.

பின்னர், கூட்டுபாலியல் வன்கொடுமை உள்ளிட்ட ஆறு குற்றச்சாட்டுகள் அந்த இரண்டாவது மாணவன் மீது சுமத்தப்பட்டுள்ளது. அதன் பின்னர், அந்த இருவரும், தங்களது 3-வது நண்பனிடம் இதுகுறித்து தற்பெருமை பேசியதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து, அந்தப் பெண்ணுடன் தானும் உடலுறவு கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் மூன்றாவது மாணவனும் அந்த இடத்திற்கு விரைந்துள்ளார்.

அங்கு வந்த அந்த 3-வது இளைஞன் அந்த பதின்மவயது இளம்பெண்ணுடன் அவரது சம்மதம் இன்றி உடலுறவு கொண்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மூன்றாவது மாணவன் மீது கடுமையான கூட்டுப்பலியால் வன்கொடுமை செய்தது உட்பட இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மூவரில் இருவர் கேம்பல்டவுனில் உள்ள செயின்ட் கிரிகோரி கல்லூரியில் பயிலும் 17 வயது கல்லூரி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த வெள்ளிக்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, குற்றம் சாட்டப்பட்ட கல்லூரி மாணவர்கள் இருவரும் ஜாமீன் கோரி விண்ணப்பித்ததாக கூறப்படுகிறது. ஆனால் குற்றத்திற்கு காரணமான அந்த முதல் மாணவன் ஜாமீன் கோரி விண்ணப்பிக்கவில்லை. இதுகுறித்து நீதிபதி, இந்த கூட்டு பாலியல் வன்கொடுமையை கடுமையாக சாடி பின்னர், கடுமையான நிபந்தனைகள் விதிப்பதன் மூலம் அந்த இளைஞர்கள் வரும் காலங்களில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் எண்ணத்தைக் குறைக்கும் என்று கூறியுள்ளார். இதன்பின்னர், அந்த இரு இணை-குற்றவாளிகளுக்கும் (கல்லூரி மாணவர்கள்) பிணை வழங்கபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com