பற்கள் புடுங்கப்பட்ட வழக்கு: விசாரணைக்கு வராத கைதிகள்... காவல்துறை சார்பில் மிரட்டலா?!

பற்கள் புடுங்கப்பட்ட வழக்கு: விசாரணைக்கு வராத கைதிகள்... காவல்துறை சார்பில் மிரட்டலா?!
Published on
Updated on
1 min read

குற்றச் செயல்களில்  ஈடுபட்டு  கைதாகும் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் சிக்கிய எஸ்.பி.பல்பீா் சிங்கிற்கு  சாதகமாக  காவல் துறையினா் செயல்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் சரகத்தின்   எஸ்.பியாக பல்பீா் சிங் பணியாற்றி வருகிறாா்.   இவா் குற்றச் செயலில் ஈடுபட்டு கைதாகும் விசாரணை கைதிகளுக்கு தண்டனையாக வாயில்  ஜல்லிகற்களை போட்டு  பற்களை புடுங்குவதோடு மட்டுமல்லாமல் அவா்கள் மீது கடுமையான தாக்குதலும் நடத்தி இருப்பதாக செய்திகள் தொிவிக்கின்றன.   இதனை அறிந்த திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் கார்த்திகேயன் குற்றம் சுமத்தப்பட்ட எஸ்.பி. பல்பீா் சிங்கை விசாரிக்க சேரன்மகாதேவி சார் ஆட்சியர் முகமது சமீர் ஆலமை விசாரணை அதிகாரியாக நியமனம் செய்தார்.

இதனைத் தொடர்ந்து நேற்று காலை விசாரணை தொடங்கிய நிலையில் பாதிக்கப்பட்டவா்களிடம் விசாரணை செய்ய முடிவு செய்யப்படதோடு , சிசிடிவி ஆதாரங்களையும் ஆய்வு செய்ய முடிவு செய்திருந்தனர்.   இந்நிலையில் விசாரணைக்காக ஒதுக்கப்பட்ட நேரம் வரை காவல்துறையை சார்ந்தவர்களோ பாதிக்கப்பட்டவர்களோ விசாரணைக்கு முன்வரவில்லை என தெரிகிறது.   விசாரணைக்கான நேரத்தை கடந்து லட்சுமி சங்கா் என்ற பாதிக்கப்பட்ட நபர் மட்டும் முக கவசம் அணிந்து  தாமாக முன்வந்து விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.   பின்னா் அவரிடம் ஒருமணி நேரத்திற்கும் மேலாக காவல் துறையினா்  விசாரணை நடைத்தினா்.   அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைக்கு பின்னா் தகவல் அளித்த காவல் துறையினர்  எஸ்.பி தாக்குதலில்  அவர்களுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என விசாரணை கைதி தெரிவித்ததாக கூறியுள்ளனர். 

பாதிக்கப்பட்ட விசாரணை கைதிகளும் காவல் துறையினரும் முறையாக விசாரணையில் கலந்து கொள்ளாததையும் இந்த விசாரணை நடவடிக்கையானது காவல் துறையினரால் மேற்கொள்ளப்பட்டதாலும் விசாரணை முறைகேடுகள் நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் மக்கள் மனதில் எழுந்துள்ளது.

-முருகானந்தம்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com