சிக்கன் கறி கேட்டது குத்தமா? ஆத்திரத்தில் கணவனின் கழுத்தை வெட்டிய மனைவி!

தம்பதியருக்கு ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது
Telangana wife killing her husband
Published on
Updated on
1 min read

தெலுங்கானா மாநிலத்தில் குடும்பத் தகராறு காரணமாக ஏற்பட்ட கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா காமரெட்டி பகுதியில், சனிக்கிழமை (ஏப்ரல் 25) இரவு உணவு தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம், இறுதியில் கணவன் உயிரிழக்கும் அளவுக்கு மோசமான திருப்பத்தை எடுத்துள்ளது.

போலீஸ் தகவலின்படி, உயிரிழந்தவர் 28 வயதான கோதண்டம் சிவாஜி. இவர் பழைய இரும்பு வியாபாரியாக வேலை செய்து வந்தார். அவரது மனைவி லட்சுமியுடன் கோசங்கி காலனியில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்தார். தம்பதியருக்கு ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். குடும்பப் பிரச்சினைகள் காரணமாக இத்தம்பதியருக்கு இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், இதற்கு முன்பும் பலமுறை குடும்ப உறுப்பினர்கள் தலையிட்டு சமாதானப்படுத்தியதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். சம்பவம் நடைபெற்ற தினமான சனிக்கிழமை மாலை, வீட்டில் சிக்கன் கறி செய்வது தொடர்பாக சிவாஜி மற்றும் லட்சுமி இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த சண்டை தீவிரமடைந்ததை தொடர்ந்து, அருகில் வசிக்கும் உறவினர்களான தாதையா மற்றும் சாரதா முதலில் தலையிட்டு தம்பதியை சமாதானப்படுத்தியுள்ளார். அவர்கள் இடைஞ்சலுக்கு பிறகு நிலைமை சற்றே அமைதியானது. ஆனால், அவர்கள் அங்கிருந்து புறப்பட்ட சில நேரங்களிலேயே மீண்டும் வாக்குவாதம் வெடித்தது. அதன்பிறகு, உணவு மற்றும் குடும்பப் பிரச்சினைகள் குறித்து சிவாஜி மீண்டும் லட்சுமியுடன் கடுமையாக வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும், மற்றொரு உறவினரான நந்தினியும் தலையிட்டு சமாதானப்படுத்த முயன்றாலும், சூழ்நிலை கட்டுக்குள் வரவில்லை.

இந்த வாக்குவாதத்தின் போது, கோபத்தில் இருந்த லட்சுமி வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து சிவாஜியின் கழுத்தில் வெட்டியதாக போலீசார் தெரிவித்தனர். இந்த தாக்குதலால் சிவாஜி உடனடியாக கீழே சரிந்து விழுந்ரதுள்ளார். அவர் விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. கழுத்தில் ஏற்பட்ட வெட்டும், தலையில் ஏற்பட்ட காயமும் சேர்ந்து அதிக இரத்தம் கசிந்து, சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து சிவாஜியின் மூத்த சகோதரர் சூரி போலீசில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், பாரதிய நியாய சம்ஹிதா பிரிவு 103(1)-ன் கீழ் லட்சுமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. சம்பவத்திற்குப் பிறகு உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. பின்னர், உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைக்க படைத்தனர். போலீசார் மேலும் தெரிவித்ததாவது, குற்றஞ்சாட்டப்பட்ட லட்சுமி திங்கட்கிழமை (ஏப்ரல் 27) கைது செய்யப்பட்டார். தற்போது அவர் நீதிமன்றக் காவலுக்கு ஆஜர்படுத்தப்பட உள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com