“நான்கு மாத கர்ப்பிணி மனைவியை குத்தி கொன்ற வாலிபர்” - 20 வயது மகளை ரத்தவெள்ளத்தில் பார்த்த பெற்றோர்கள்.. காதல் கணவன் சைக்கோவானது ஏன்?

ஜோடியாக சேர்ந்து வீடியோக்களை செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்திருக்கின்றனர்...
“நான்கு மாத கர்ப்பிணி மனைவியை குத்தி கொன்ற வாலிபர்” - 20 வயது மகளை ரத்தவெள்ளத்தில் பார்த்த பெற்றோர்கள்.. காதல் கணவன் சைக்கோவானது ஏன்?
Published on
Updated on
2 min read

தெலுங்கானா மாநிலம், ஜக்தியால் மாவட்டம் மாதப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் 20 வயதுடைய வைஷ்ணவி. இவர் ஒரு ‘வைஷு அம்மா’ என்ற பெயரில் ஒரு யூடுயூப் சேனல் வைத்து நடத்தி வந்தார். அப்போது இவருக்கு பக்கத்துக்கு ஊரை சேர்ந்த ஹரிபிரசாத் என்பவருடன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில் இவர்களது பழக்கமானது காதலாக மாறியுள்ளது. இதனை அறிந்த பிரசாந்தின் பெற்றோர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் வைஷ்ணவியின் வீட்டில் இவர்களது காதலை ஆதரித்திருக்கின்றனர். ஆனால் வைஷ்ணவிக்கு திருமணத்திற்கான வயது இல்லை என்பதால் திருமானதாகி தள்ளி போடா நினைத்ததாக சொல்லப்படுகிறது.

அப்போது உடனே வைஷ்ணவியை திருமணம் செய்து வைக்கவில்லை என்றால் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொள்வேன் என ஹரிபிரசாத் மிரட்டவே வேறு வழியின்றி வைஷ்ணவியின் பெற்றோர் இருவருக்கும் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து வைத்திருக்கின்றனர். திருமணத்திற்கு பிறகு தம்பதிகள் வைஷ்ணவி வீட்டில் வசித்து வந்த நிலையில் ஜோடியாக சேர்ந்து வீடியோக்களை செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்திருக்கின்றனர். அப்போது வைஷ்ணவி தனது கணவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகவும் அதனை தனது பெற்றோர்கள் கண்டித்ததாகவும் ஒரு பிராங்க் வீடியோ செய்திருக்கிறார்.

Admin

இதனால் கணவன் மனைவிக்கு இடத்தையே வாக்குவாதம் நடந்த நிலையில் ஹரி பிரசாந்தின் குடும்பத்தினர் வைஷ்ணவியிடம் வரதட்சணை கேட்டதாக சொல்லப்படுகிறது. மேலும் ஹரி பிரசாந்த்தும் மனைவியாய் வரதட்சணை கேட்டு தொல்லை செய்து வந்திருக்கிறார். இந்நிலையில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு வைஷ்ணவி கர்ப்பமடைந்த நிலையில் கணவன் வரதட்சணை பிரச்சனையை மறந்து அவரை அன்புடன் பார்த்து கொண்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் மீண்டும் கடந்த (மார்ச் 17) ஆம் தேதி இரவு கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் அதிகாலை நான்கு மணி அளவில் ஹரிபிரசாந்த் அவரது மனைவியை கத்தியால் குத்தியும் கழுத்தை நெரித்தும் கொலை செய்திருக்கிறார்.

பின்னர் இரண்டு மணி நேரம் அதே அறையில் இருந்துவிட்டு காலை 6 மணியளவில் எதுவும் தெரியாதது போல வெளியில் வந்து பல் துலக்கிவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றிருக்கிறார். நீண்ட நேரமாகியும் வைஷ்ணவி தனது அறையை விட்டு வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர்கள் அறைக்கு சென்று பார்த்த போது மகள் கொலை செய்யப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வைஷ்ணவி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு தனிப்படை அமைத்து தப்பி சென்ற ஹரிபிரசாந்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். நான்கு மாத கர்ப்பிணியாக இருந்த 20 வயது மனைவியை கணவன் குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com