“மருத்துவர்கள் வாழ்க்கையில் வந்த இன்ஸ்டா பிரபலம்” - கள்ளக் காதலிக்காக கணவர் செய்த செயல்.. மனைவி தூக்கிட்டு தற்கொலை!

அதிக நேரம் பேசிக் கொள்வது என இவர்களின் நட்பு திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியுள்ளது
husband and wife
husband and wife
Published on
Updated on
2 min read

தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டம் கமலாபுரம் பகுதியை சேர்ந்தவர் இதய அறுவை சிகிச்சை நிபுணர் ஸ்ருஜன். இவருக்கும் அசன்புரம் பகுதியை சேர்ந்த பல் மருத்துவரான பிரத்யுஷா என்பவருக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. ஸ்ருஜன் பிரத்யுஷா தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் ஸ்ருஜன் MGM மருத்துவமனையில் இதய சிகிச்சை மருத்துவராகவும், பிரத்யுஷா SSR மருத்துவமனையில் பல் மருத்துவராக பணிபுரிந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் ஸ்ருஜன் பணிபுரிந்த மருத்துவமனையின் புதிய கட்டிடம் திறப்பு விழாவிற்கு அப்பகுதியின் இன்ஸ்டா பிரபலமான சுருதி என்பவரை சிறப்பு விருந்தினராக அழைத்துள்ளனர். அப்போது மருத்துவமனையின் விளம்பரத்திற்காக சுருதி மருத்துவமனையில் உள்ள ஒவ்வொரு மருத்துவரிடமும் தனியாக பேசி பேட்டி எடுத்துள்ளார். அவ்வாறு ஸ்ருஜனிடம் பேசிய சுருதி தனக்கு மருத்துவர்கள் என்றால் பிடிக்கும் என்பது போல் பேசியுள்ளார்.

இதனை பயன்படுத்திக் கொண்ட ஸ்ருஜன் சுருதியிடம் நட்பாக பழக தொடங்கியுள்ளார். பின்னர் இருவரும் வெளியில் செல்வது அதிக நேரம் பேசிக் கொள்வது என இவர்களின் நட்பு திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியுள்ளது. ஸ்ருஜன் திருமணம் ஆனவர் என்று தெரிந்தும் ஸ்ருஜனுடன் பழகி வந்துள்ளார். இதனை அறிந்த பிரத்யுஷா ஸ்ருஜனை கண்டித்துள்ளார். இரண்டாவது குழந்தையின் பிரசவத்திற்காக பிரத்யுஷா தனது தாய் வீட்டிற்கு சென்ற போது ஸ்ருஜன் சுருதியை தனது வீட்டில் தங்க வைத்ததாக அக்கம் பக்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

doctor and insta celebrity
doctor and insta celebrity

இதனால் ஸ்ருஜன் மற்றும் பிரத்யுஷா இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சுருதியை திருமணம் செய்து கொள்ள நினைத்த ஸ்ருஜன் பிரத்யுஷாவை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் கொடுமை செய்து வந்துள்ளார். ஸ்ருஜனின் பெற்றோரும் ஸ்ருஜனுக்கு ஆதரவாக இருந்து பிரத்யுஷாவை கொடுமை செய்ததாக சொல்லப்படுகிறது. எனவே மனமுடைந்த பிரத்யுஷா தனது வீட்டில் கடந்த (ஜூலை 13) தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை அக்கம் பக்கத்தினர் மூலம் அறிந்து கொண்ட பிரத்யுஷாவின் பெற்றோர்கள் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.

அங்கு பிரத்யுஷாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால் கோபமடைந்த பெற்றோர்கள் ஸ்ருஜன் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வரை தனது மகளின் உடலை வாங்க மறுத்து போராட்டம் செய்து வந்தனர். எனவே இது குறித்து விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்ட வாரங்கள் காவல்துறையினர், ஸ்ருஜன், சுருதி மாற்று ஸ்ருஜனின் பெற்றோர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கணவனின் தகாத உறவால் இரண்டு குழந்தைகளை விட்டு மருத்துவர் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வாகாது, மன உளைச்சல் இருந்தால் அழைக்க வேண்டிய எண்-1800-599-0019.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com