ஈவு, இரக்கமே இல்லாமல் நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு..! சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாத தாக்குதல் !காஷ்மீரில் பயங்கரம்..!

ராணுவ சீருடையில் வந்த தீவிரவாதிகள்...
kashmir terror attack
kashmir terror attack
Published on
Updated on
1 min read

ஜம்மு-காஷ்மீரில் உள்ள பஹல்காமைக்கு அருகில் அமைந்திருக்கும்  பைசரன் பள்ளத்தாக்கு ஒரு ரம்மியமான சுற்றுலாத்தளம் ஆகும். இது சின்ன ஸ்விச்சர்லாந்து என்றும் அழைக்கப்படுகிறது.  இந்த பகுதிக்கு நடந்தோ அல்லது குதிரையிலோ மட்டுமே செல்ல முடியும்.  இப்பகுதியில் பயணிகளுக்கென கேளிக்கை விடுதிகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில்  ரிசார்ட்டில், பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் புல்வெளியில் குதிரை சவாரி செய்து கேளிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது ராணுவ சீருடையில் வந்த தீவிரவாதிகள் சுற்றுலா பயணிகள் மீது கண்மூடித்தனமாக தாக்கியதில் வெளிநாட்டவர் 2 பேர் உட்பட 28 பேர் பரிதாபமாக இந்த பயங்கர தாக்குதலில் இந்திய கடற்படையைச் சேர்ந்த அதிகாரி, ஐதராபாத் உளவுப் பிரிவு அதிகாரி உள்ளிட்டோரும்  கொல்லப்பட்டனர். தமிழ்நாடு சேர்ந்த மூவர் படுகாயம் அடைந்துள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com