

மாணவர்களுடன் முறையற்ற உறவுகள் வைத்திருந்ததாக வெளிவந்த குற்றச்சாட்டுகளை அடுத்து கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்குப் பிறகு, டெக்சாஸ் உயர்நிலைப் பள்ளியின் முன்னாள் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிய ஹோலி ஆடம்ஸ் மீது, பெறப்பட்ட ஆதாரங்களைத் திரித்ததாக ஒரு குற்றச்சாட்டும், சிறுவர்களுக்கு மதுபானம் வாங்கிக் கொடுத்தது அல்லது வழங்கியது தொடர்பாக இரண்டு குற்றச்சாட்டுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. அந்த பள்ளியில் படித்த முன்னாள் மாணவர் ஒருவருடன் ஆடம்ஸ் முறையற்ற உறவில் இருப்பதாக ஒரு மாணவி பள்ளி அதிகாரிகளிடம் தெரிவித்ததில் இருந்து கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்குப் பிறகு, அவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
கோடை விடுமுறையின் போது, ஆடம்ஸின் வீட்டில் உள்ள ஒரு படுக்கையறையிலிருந்து பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் மாணவர் ஃபேஸ்டைம் மூலம் தன்னை அந்த ஆசிரியர் அழைத்ததாக காவல்துறையினரிடம் கூறியுள்ளார். அந்தப் படுக்கை முழுவதும் அந்த மாணவரின் நிர்வாணப் புகைப்படங்கள் கண்டெடுத்ததாக கூறப்படுகிறது. மேலும், வீட்டு வேலைகளைச் செய்வதற்காக மாணவர்களைத் தனது வீட்டிற்கு அழைத்ததாக ஆடம்ஸ் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், பிரபலமான புகைப்படச் செய்தி அனுப்பும் செயலியான ஸ்னாப்சாட்டில் உயர்நிலைப் பள்ளியில் பயின்ற பேஸ்பால் அணியின் மூன்று மாணவர்களுடன் தொடர்பு கொண்டதை அவர் ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் நபர், ஆடம்ஸுடன் சோபாவில் அணைத்துக்கொண்டிருக்கும் ஒரு புகைப்படத்தை அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், சிறார்களுக்கு மதுபானம் வழங்கியதாக இரண்டு குற்றச்சாட்டுகளின் பேரிலும், ஆதாரங்களைத் திரித்ததாக ஒரு குற்றச்சாட்டின் பேரிலும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. காவல்துறை அவரது வீட்டில் சோதனை நடத்தியதில், நான்கு கைபேசிகள், 11 நிர்வாணப் புகைப்படங்கள் மற்றும் நிர்வாணப் படங்கள் அடங்கிய ஒரு புகைப்படப் புத்தகம் ஆகியவற்றைக் கைப்பற்றியுள்ளனர். இனி அவர் அந்த பள்ளியின் ஊழியர் இல்லை என்றும் பள்ளி நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்