“ஒரே இரவில் நடந்த மூன்று கொலைகள்” - சென்னைக்கு வந்த வடமாநில குடும்பத்திற்கு நேர்ந்த கொடூரம்.. இரண்டாவது நாளாக உடலை தேடும் போலீசார்!

அவர்களது குழந்தையான இரண்டாவது சிறுவனையும் அடித்து கொலை செய்திருக்கின்றனர்...
“ஒரே இரவில் நடந்த மூன்று கொலைகள்” - சென்னைக்கு வந்த வடமாநில குடும்பத்திற்கு நேர்ந்த கொடூரம்.. இரண்டாவது நாளாக உடலை தேடும் போலீசார்!
Published on
Updated on
2 min read

சென்னை அடையாறு இந்திரா நகர் முதல் சாலை சந்திப்பில் கடந்த (ஜன 26) திங்கட்கிழமை காலை சாலை ஓரத்தில் ரத்தம் வெளியேறி நிலையில் ஒரு சாக்கு மூட்டை கிடந்துள்ளது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சாக்கு மூட்டை பிரித்து பார்த்த போது அதில் 30 வயது நபர் ஒருவரின் உடல் இருந்துள்ளது. அதனை தொடர்ந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து 6 தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டனர்.

சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சாக்கு மூட்டையை எடுத்து வந்து வீசிய 33 வயதுடைய சிக்கந்தர் மற்றும் 45 வயதுடைய நரேந்திரகுமார் ஆகிய இரண்டு வடமாநில தொழிலாளர்களை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பீகார் மாநிலத்தை சேர்ந்த 26 வயதுடைய கௌரவ் குமார் தனது மனைவி மற்றும் 2 வயது ஆண் குழந்தையுடன் கடந்த சில தினங்களுக்கு சென்னைக்கு வேலை தேடி வந்த நிலையில் அடையாறில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்திருக்கிறார்.

Admin

அப்போது அவருக்கு பழக்கமான அதே பீகார் மாநிலத்தை சேர்ந்த தரமணி பாலிடெக்னிக் கல்லூரியில் காவலாளியாக பணிபுரியும் சிக்கந்தர் என்பவர் கடந்த 25 ஆம் தேதி அவருக்கு வேறு நல்ல வேலை வாங்கி தருவதாக சொல்லி தான் பணிபுரியும் கல்லூரி வளாகத்திற்கு கௌரவ் குமார், அவரது மனைவி மற்றும் குழந்தையை அழைத்துச் சென்றிருக்கிறார். பின்னர் அங்கு கௌரவ் குமார், சிக்கந்தர் மற்றும் சிக்கந்தரின் நண்பர்கள் சிலர் ஒன்றாக அமர்ந்து மது அருந்திய நிலையில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த சிக்கந்தர் மற்றும் அவரது நண்பர்கள் கௌரவ் குமாரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

அப்போது அதனை தடுக்க முயன்ற கௌரவ் குமாரின் மனைவியையும் சரமாரியாக தாக்கி அவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக சொல்லப்படுகிறது. இதில் கணவன் மற்றும் மனைவி இருவரும் உயிரிழந்த நிலையில் அவர்களது குழந்தையான இரண்டாவது சிறுவனையும் அடித்து கொலை செய்திருக்கின்றனர். பின்னர் மூவரின் உடலையும் தனித்தனியாக சாக்கு மூட்டையில் கட்டி கௌரவ் குமாரின் உடலை அடையார் சாலையிலும் அவரது மனைவியின் உடலை இந்திராநகரில் உள்ள ஒரு குப்பை தொட்டியிலும் குழந்தையின் உடலை மத்திய கைலாஷ் பகுதியில் உள்ள பக்கிங்காம் கால்வாயில் வீசியது தெரியவந்தது.

Admin

இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிக்கர்ந்தார் மற்றும் அவரது நண்பர்களான நரேந்திர குமார்(45), ரவீந்திரநாத் தாகூர்(45), பிகாஸ்(24) உட்பட ஐந்து பேரை கைது செய்துள்ளனர். மேலும் பெண் மற்றும் குழந்தையின் உடலை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வரும் நிலையில் மத்திய கைலாஷ் பகுதியில் உள்ள பக்கிங்காம் கால்வாயில் வீசிய குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் இந்திரா நகர் குப்பை தொட்டியில் வீசப்பட்ட பெண்ணின் உடலை பெருங்குடியில் உள்ள குப்பை கிடங்கில் தொடர்ந்து இரண்டாவது நாளாக தேடி வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேரை கொன்று உடலை வெவ்வேறு இடத்தில் கொலையாளிகள் வீசிய சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com