பள்ளி ஆசிரியரை அரிவாளால் வெட்டிய சகோதரன்...

அரசு பள்ளியில் சொத்து பிரச்சனை காரணமாக சகோதரனே பள்ளி ஆசிரியரை அரிவாளால் வெட்டியுள்ளார்.
பள்ளி ஆசிரியரை அரிவாளால் வெட்டிய சகோதரன்...
Published on
Updated on
1 min read

விழுப்புரம் | கோலியனூர் அரசு மேல்நிலை பள்ளியில் அரியலூரை சார்ந்த நடராஜன் என்பவர் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் வழக்கம் போல் பள்ளிக்கு வந்த நடராஜனிடம் அவரது சகோதரர் ஸ்டாலின் தான் வெளிநாட்டில் சம்பாதித்து அனுப்பி வைத்த பணத்தை கொடுக்க வேண்டும் சொத்து பிரச்சனையை தீர்க்க வேண்டும் என கூறி வாக்குவாதம் செய்துள்ளார்.

அப்போது நடராஜன் பள்ளியில் வந்து இது பற்றி பேசவேண்டாம் என பிடிகொடுக்காமல் பேசவே ஆத்திரமடைந்த சகோதரரான ஸ்டாலின் மறைத்து வைத்திருந்த கத்தியால் கை மற்றும் முதுகு பகுதியில் வெட்டவே அருகிலிருந்த மாணவர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இதில் பள்ளி மாணவன் ஒருவனுக்கு கை விரலில் லேசான காயமும் ஆசிரியருக்கு வெட்டு காயம் ஏற்படவே உடனே முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் ஆசிரியரை அனுமதித்தனர்.

இச்சம்பவத்தில் கத்தியால் வெட்டிய ஸ்டாலினை மாணவர்கள் ஆசிரியர்கள் பிடித்து வளவனூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து போலீசார் ஸ்டாலின் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com