இரத்த வெள்ளத்தில் துடி துடிக்க கொலை செய்த கணவன்! மனைவி மற்றும் மகள் கழுத்தை அறுத்த கொடூரம்...

சிவரஞ்சனி மற்றும் அவரது மகள் ஜெயா ஹரிணி இருவரும் கழுத்து அறுபட்ட நிலையில் பிணமாக கிடந்துள்ளனர்..
kolathur murder
Published on
Updated on
1 min read

சென்னை கொளத்தூரில் உள்ள வெற்றி நகர் தேவகி அம்மாள் குறுக்கு தெரு பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (47). இவர் அப்பகுதியில் தனது மனைவி மற்றும் சிவரஞ்சனிக்கு (43) இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளனர். அவர்கள் இருவருக்கும் பிரணவ் (14) என்ற மகனும் ஜெயா ஹரிணி (9) என்ற மகளும் உள்ளனர்.

இவர்கள் மேற்கூறிய முகவரியில், முதல் தளத்தில் உள்ள தங்களது வீட்டில் வசித்து வந்துள்ளனர். சீனிவாசனின் தாயார் மைதிலி கீழ்தளத்தில் வசித்து வந்திருக்கிறார். நேற்று வழக்கம் போல அனைவரும் சாப்பிட்டு விட்டு தூங்க சென்றுள்ளனர். சீனிவாசனின் மகன் பிரணவ் மட்டும் கீழ்தளத்தில் உள்ள தனது பாட்டியுடன் படுத்து உறங்க சென்றியிருக்கிறார். முதல் தளத்தில் உள்ள வீட்டில் சீனிவாசன் அவரது மனைவி சிவரஞ்சனி மற்றும் மகள் ஜெயா ஹரிணி ஆகியோர் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர்.

30ம் தேதி காலை 8 மணி அளவில் கீழ்த்தளத்தில் தனது பாட்டியுடன் உறங்கிக் கொண்டிருந்த பிரணவ், முதல் தளத்தில் உள்ள தனது வீட்டிற்கு சென்று பார்த்தபோது அங்கு தனது தாய் மற்றும் தங்கை இருவரும் கழுத்து அறுபட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியில் கூச்சலிட்டுள்ளார். உடனே அவரது பாட்டி மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடி சென்று பார்த்தபோது சிவரஞ்சனி மற்றும் அவரது மகள் ஜெயா ஹரிணி இருவரும் கழுத்து அறுபட்ட நிலையில் பிணமாக கிடந்துள்ளனர். உடனே அக்கம் பக்கத்தினர் இந்த சம்பவம் குறித்து திருவிக நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

திரு வி க நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்த சிவரஞ்சனி மற்றும் ஜெயா ஹரிணி ஆகியோர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போதுதான் அந்த அதிர்ச்சி அளிக்கும் செய்தி வெளிவந்தது. அதாவது, உயிரிழந்த சிவரஞ்சினியின் கணவர் சீனிவாசன் கடந்த இரண்டு வருடமாக மனநிலை பாதிக்கப்பட்டு அதற்கு மருந்து மாத்திரைகள் எடுத்து வந்துள்ளார். மேலும், இவர் தனது மனைவியுடன் அடிக்கடி சண்டையிட்டும் வந்திருக்கிறார். இந்நிலையில்தான் நேற்று இரவு சண்டை நடந்த நிலையில் இருவரும் தூங்க சென்றிருக்கின்றனர். நிலையில்தான் அதிகாலை 3 மணி அளவில் சீனிவாசன் எழுந்து தனது மனைவி மற்றும் மகளின் கழுத்தை அறுத்திருக்கிறார். கொலை செய்துவிட்டு சீனிவாசன் வீட்டில் இருந்து தப்பி ஓடியிருப்பது தற்போது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்போது, தப்பி ஓடிய சீனிவாசனை திரு வி க நகர் போலீசார் தேடி வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com