காதல் திருமணம் செய்தவரை கொன்று கல்லைக்கட்டி குளத்தில் வீசிய கொடுமை... பெண்ணின் உறவினர்கள் வெறிச்செயல்..?

காதல் திருமணம் செய்தவரை கொன்று கல்லைக்கட்டி குளத்தில் வீசிய கொடுமை... பெண்ணின் உறவினர்கள் வெறிச்செயல்..?

காதல் திருமணம் செய்த கார் டிரைவர் தென்காசியில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் கொலை தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
Published on

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியை சேர்ந்த அரவிந்தன் அதே பகுதியில் வசித்து வரும், தென்காசியை சேர்ந்த பெண் ஒருவரை கலப்பு திருமணம் செய்துள்ளார்.  

இந்நிலையில் தென்காசி பகுதியில் வேலை தேடி சென்ற அரவிந்தன் கடந்த 3-ஆம் தேதி முதல்  காணவில்லை என கூறி உறவினர்கள் தென்காசி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே புலியூர் கிராம நிர்வாக அலுவலர் உமா மகேஸ்வரியிடம் கீழபுலியூரை சேர்ந்த பொன்னரசு என்பவர், அரவிந்தனை கொலை செய்து அருகில் உள்ள கல்குவாரியில் உள்ள குளத்தில் போட்டு விட்டதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அரவிந்தனின் உடலை மீட்டனர். மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக 5 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் பெண்ணின் உறவினர் சிலர் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com