பச்சிளம் குழந்தையை சூட்கேசில் வைத்து வீசிச் சென்ற கொடூரம்...

ராணிப்பேட்டை மாவட்டம், பாணவரம் அருகே பச்சிளம் குழந்தை  சூட்கேட்சில் வைத்து உயிருடன் வீசப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்துகின்றனர். 
பச்சிளம் குழந்தையை சூட்கேசில் வைத்து வீசிச் சென்ற கொடூரம்...

பாணவரம் அடுத்த தப்பூர் ஒடைக்கால்வாய்  கரையில் கேட்பாரற்று மூடிய நிலையில் கிடந்த சூட்கேஸை அந்த வழியாக சென்ற மீனவர்கள் திறந்து பார்த்துள்ளனர். அதில் பிறந்து சில தினங்களேயான குழந்தை துணிகளுக்கு இடையே கிடத்தப்பட்டிருந்தது.

இதுகுறித்து உடனடியாக கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு விரைந்த வி.ஏ.ஓ சுமன், குழந்தையை மீட்டு அங்குள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் முதலுதவி சிகிச்சைக்காக சேர்த்தார்.

அதைத்தொடர்ந்து குழந்தையின் கை மற்றும் கால் ரேகைகள் பதிவு செய்யப்பட்டு, குழந்தை மாவட்ட சைல்டு ஹல்ப்லைன் குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக வழக்கு பதிந்து, குழந்தை யாருடையது என போலீசார் விசாரணையை துவக்கியுள்ளனர்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com