ஆசை வார்த்தை கூறி ஆயிரக்கணக்கான பொது மக்களை ஏமாற்றிய கும்பல்....

ஆசை வார்த்தை கூறி ஆயிரக்கணக்கான பொது மக்களை ஏமாற்றிய கும்பல்....
Published on
Updated on
1 min read

பெண் தொழிலதிபரை மிரட்டி பணம் பறிப்பதாக சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை அசோக் நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில்  பிரபல நிறுவனங்களான ஆருத்ரா கோல்ட் நிறுவனம், ஹிஜாவு நிறுவனம், என் எல் எஸ் ஆகிய நிறுவனங்கள் அதிக வட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறி ஆயிரக்கணக்கான பொது மக்களை ஏமாற்றியுள்ளனர். 

இது தொடர்பாக ஏற்கனவே பொருளாதார குற்றப்பிரிவில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் சம்மந்தப்பட்ட நபர்கள் தேடப்படும் குற்றவாளியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த நிலையில் இதனை சாதகமாக பயன்படுத்தி ருத்ரா டிரேடிங் என்ற நிறுவனத்தின் உரிமையாளர் ரிதன்யா என்கிற பெண் தொழிலதிபரை செய்யாறு பகுதியை சேர்ந்த பாஸ்கர் என்பவர் தொடர்ச்சியாக கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்.  ஏற்கனவே பாஸ்கர் ருத்ரா டிரேடிங் நிறுவனத்தில் 90 லட்சம் ரூபாய் முதலீடு செய்த நிலையில் அந்த பணமும் அவருக்கு திரும்ப அளிக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக செய்யார் பகுதியில் தீபாவளி பண்டு, சிட் பண்ட், உட்பட பல ஏல சீட்டுகளை நடத்தி மக்களிடம் பணம் பெற்று ஏமாற்றியுள்ளார்.  இது தொடர்பாக செய்யாறு காவல் நிலையத்தில் அவர் மீது புகார்கள் குவிந்துள்ளது. இந்த நிலையில் பொது மக்களிடம் ஏமாற்றிய பணத்தை எப்படி பெறுவது என்று தெரியாமல் இருந்த செய்யாரு பாஸ்கர் ருத்ரா டிரேடிங் நிறுவனத்தில் ஏமாந்து விட்டதாகவும் இவர்கள்தான் பணத்தை தர வேண்டும் என செய்யாறு பகுதி மக்களை நம்ப வைத்து ருத்ரா டிரேடிங் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் நிறுவனர்கள் என  அனைவரையும் பிரபல ரவுடிகளை வைத்து கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்.  இது தொடர்பாக ருத்ரா டிரேடிங் வழக்கறிஞர் சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.  இந்த புகாரின் அடிப்படையில் அவர் மீது தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com