குடும்பம் நடத்த வரமறுத்த மனைவி...முழு மனித வெடிகுண்டாக மாறிய கணவன்..இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி!

குடும்பம் நடத்துவதற்கு வரமறுத்த மனைவியை கணவன் ஒரு மனித வெடிகுண்டாக மாறி கொலை செய்து தானும் உயிரிழந்த சம்பவம் குஜராத்தில் நிகழ்ந்துள்ளது.
குடும்பம் நடத்த வரமறுத்த மனைவி...முழு மனித வெடிகுண்டாக மாறிய கணவன்..இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி!
Published on
Updated on
1 min read

குஜராத் மாநிலம் ஆராவல்லி மாவட்டம் மெகராஜ் நகரில் வசித்து வருபவர் லாலாபாகி - சாராபென்  தம்பதி. கட்டிட தொழிலாளியான இவருக்கு ஒரு மகன் உள்ளார். என்னதான் தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளை இருந்தாலும் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததுள்ளது. 

இதேபோன்று கடந்த 45 நாட்களுக்கு முன்னர் கணவன் மனைவி இருவருக்கும் இடையே நடந்த தகராறில் சாராபென் கணவரிடம் கோபித்துக்கொண்டு அவரின் பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். அதற்கு பிறகு மனசு கேட்காத லாலாபாகி தன்னுடன் சேர்ந்து வாழ வருமாறு மனைவியை அழைத்துள்ளார். ஆனால் சாராபென் மறுப்பு தெரிவித்ததோடு, அவரும் அவர் குடும்பத்தினரும் சேர்ந்து லாலாபாகியை மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் கோபமடைந்த லாலாபாகி மனைவியை கொலை செய்ய திட்டமிட்டு, அவர் ஒரு மனித வெடிகுண்டாக மாற முடிவு செய்தார். அதற்கேற்றார்போல் சம்பவத்தன்று லாலாபாகி தனது இடுப்பு பகுதியில் 2 ஜெல்லட்டின் குச்சிகளை சுற்றி வைத்து கட்டி அதற்கு பேட்டரி மூலம் வயரால் இணைப்பு கொடுத்து, அது தெரியாமல் இருக்க மேலே சட்டை அணிந்து கொண்டார்.

இந்நிலையில் மனைவி வீட்டிற்கு சென்ற லாலாபாகி குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார்.  அப்போதும் சாராபென் நான் உன்னுடன் வாழ விரும்பவில்லை என கூறி மறுப்பு தெரிவித்ததால், கோபத்தின் உச்சிக்கு சென்ற லாலாபாகி தனது மனைவியை கட்டிப் பிடித்து, உடனே தனது இடுப்பில் கட்டி இருந்த ஜெலட்டின் குச்சிகளை வெடிக்க செய்தார். இதில் பலத்த காயம் அடைந்த 2 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பின்னர் இதுகுறித்து தகவலறிந்த போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com