செவிலியரை கத்தி முனையில் மிரட்டி ஆறரை பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு.. அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குள் புகுந்து மர்ம நபர்கள் கைவரிசை!!

செவிலியரை கத்தி முனையில் மிரட்டி ஆறரை பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு.. அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குள் புகுந்து மர்ம நபர்கள் கைவரிசை!!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குள் புகுந்து செவிலியரை கத்தி முனையில் மிரட்டி ஆறரை பவுன் தங்கச் சங்கிலி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Published on

அங்குள்ள செவல்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்  நந்தினி என்பவர் செவிலியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று நள்ளிரவில் கீழே விழுந்ததில் காயம் எனக் கூறி இரண்டு மர்ம நபர்கள் மருத்துவமனைக்கு வந்துள்ளனர்.

பின்னர் திடீரென மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்துக் காட்டி மிரட்டி நந்தினியின் கழுத்தில் இருந்த ஆறரை பவுன் தங்கச் சங்கிலி மற்றும் செல்போனை பறித்துச் சென்றதாக கூறப்படுகிறது.

மருத்துவமனையில் பிரசவத்திற்காக மகளைச் சேர்த்து விட்டு வெளியில் படுத்திருந்த சின்னப்பன் என்பவரையும் தாக்கி அவரிடமிருந்த செல்போனையும்  மர்மநபரக்ள பறித்துச் சென்றுள்ளனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த கொள்ளை தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com