டிக் டாக் பிரபலங்களை ஆபாச படம் எடுத்து மிரட்டிய நபர்... சினிமாவில் நடிக்க வைப்பதாக மோசடி...

ராமேஸ்வரத்தில் டிக் டாக் பிரபலங்களை ஆபாச படம் எடுத்து பணம் கொள்ளையில் ஈடுபட்டவர் கைது செய்து போலீஸ் நடவடிக்கை.
டிக் டாக் பிரபலங்களை ஆபாச படம் எடுத்து மிரட்டிய நபர்... சினிமாவில் நடிக்க வைப்பதாக மோசடி...

ராமேஸ்வரத்தில் உள்ள தனியார் விடுதியில் சந்தேகப்படும் படியாக ஒரு நபர் அடிக்கடி வெவ்வேறு பெண்களை அழைத்து வந்து கடற்கரை பகுதியில் சுற்றி தெரிவதாக அப்பகுதியை சேர்ந்த மீனவர்  கார்த்திக் ராஜா என்பவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை ஈடுபட்டபோது தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியை சேர்ந்த இமானுவேல் ராஜா (எ) சக்தி என்ற நபர் டிக் டாக்,முகநூலில் முக்கிய  பிரபலங்களை தொடர்பு கொண்டு அவர்களுடைய அலைபேசி எண்ணை வாங்கி சினிமாவில் நடிக்க வைக்கிறேன் என்று ஆசைவார்த்தை கூறி 30க்கும் மேற்பட்ட பெண்களை ராமேஸ்வரத்திற்கு அழைத்து வந்து விடுதியில் தங்கி அவர்களை ஆபாசமாக படம் எடுத்து மீண்டும் அவர்களை மிரட்டி பணத்தை  பறித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து இமானுவேல் ராஜா என்ற சக்தியை    கைது செய்த ராமேஸ்வரம் நகர் காவல் நிலைய போலீசார் அவரிடமிருந்து 10க்கும் மேற்பட்ட ஏடிஎம் கார்டு, செல்போன் உள்ளிட்டவற்றை  பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com