வடசென்னை அருகே குடிபோதையில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வரும் அஜீஸ் என்பவர் கடந்த 4ஆம் தேதி நள்ளிரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது இரு சக்கர வாகனத்தில் மதுபோதையில் வந்த இளைஞர், காவலர் அஜீஸின் வாகனத்தின் மீது மோதியுள்ளார். இதனையடுத்து காவலருக்கும் அந்த நபருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டநிலையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.