பசு மாடு கடத்தல்; 3 பேர் கைது

பசு மாடு கடத்தல்; 3 பேர் கைது

Published on

திண்டுக்கல் அருகே பசுமாட்டை கடத்திய வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள தும்மலக்குண்டு பகுதியைச் சேர்ந்தவர் அய்யப்பன். மேய்ச்சலுக்காக வயலில் கட்டியிருந்த இவரது 2 பசுமாடுகள் காணாமல் போனதையடுத்து சுற்றுப்பகுதிகளில் தேடியுள்ளார். இதனையடுத்து சரக்கு வண்டியில் பசுமாட்டை கடத்திச் சென்றவர்களை அய்யப்பன் வழிமறித்து நிறுத்தினார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வடமதுரை போலீசார் விசாரணை மேற்கொண்டதில் சதீஷ் என்பவர் அய்யப்பன் மாட்டை அவரது மாடுபோல் பாண்டியன், பிச்சை மற்றும் தங்கராஜ் ஆகியோருக்கு விற்றது தெரியவந்தது. இதனையடுத்து இவர்கள் மூவரையும் கைது செய்ததுடன் தலைமறைவான சதீஷை தேடி வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com