பெரிய ஆளு பா நீ.. அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பல கோடிகளை சுருட்டிய நபர்கள்..!

பெரிய ஆளு பா நீ.. அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பல கோடிகளை சுருட்டிய நபர்கள்..!
Published on
Updated on
1 min read

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி கோடிக் கணக்கில் பண மோசடி செய்த மூன்று பேரை போலீசார் சிறையில் அடைத்தனர்.

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி

ஆவடியை சேர்ந்த குமார் என்பவர், சென்னை காவல் ஆணையரகத்தில் அளித்த புகாரின் பேரில் நடத்தப்பட்ட விசாரனையில், தலைமைச் செயலகத்தில் உதவி பிரிவு அலுவலராக பணியாற்றி பணி நீக்கம் செய்யப்பட்ட மாதவன் என்பவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து, அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல இளைஞர்களிடம் பணத்தைப் பெற்றதும், தலைமைச் செயலகத்திலேயே போலி நேர்முகத் தேர்வு நடத்தி போலி நியமன ஆணையை வழங்கியதும் தெரியவந்தது. இதையடுத்து மாதவனையும் அவரது நண்பர்கள் இரண்டு பேரையும் கைது செய்து சிறையிலடைத்தனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com