உதயநிதி தலைக்கு ரூ.10 கோடி அறிவித்த சாமியார்!

உதயநிதி தலைக்கு ரூ.10 கோடி அறிவித்த சாமியார்!

சனாதனம் குறித்து பேசிய அமைச்சர் உதயநிதி தலைக்கு 10 கோடி ரூபாய் பரிசு என அயோத்தியைச் சேர்ந்த பரமஹம்ச ஆச்சாரியா எனும் சாமியார் அறிவித்துள்ளார்.  

கடந்த 2 ஆம் தேதி சென்னை காமராஜர் அரங்கத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் சனாதனத்தை எதிர்ப்பதை விட ஒழிப்பதே சிறந்தது. டெங்கு ஒழிப்பு, காலரா ஒழிப்பு, போலியோ ஒழிப்பு போல சனாதனத்தயைும் ஒழிக்க வேண்டும். எதிர்க்க கூடாது. எனவே இந்த மாநாட்டின் தலைப்பு தனக்கு பிடித்திருக்கிறது என உதயநிதி தனது கருத்தை முன்வைத்தார். 

உதயநிதியின் இந்த சமத்துவ கருத்துக்களுக்கு பாஜக கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகிறது. மேலும்  டெல்லி, பீகார் மாநிலங்களில் உதயநிதி மீது அம்மாநில பாஜகவினரால் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அமைச்சர் உதயநிதியின் தலையை வெட்டிக் கொண்டு வருபவர்களுக்கு 10 கோடி ரூபாய் பரிசு என  அயோத்தி சாமியார் பரமஹம்ச ஆச்சார்யா அறிவித்திருக்கிறார். 

மேலும், அமைச்சர் உதயநிதியின் உருவப்படத்தை வாளால் குத்திக்கிழித்தும், எரித்தும் அவர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com