தாயிடம் பேச போவதாக கூறி செல்போனை திருடிய சிறுவன்!!சரமாரியாக தாக்கிய பொதுமக்கள்...

தாயிடம் பேசுவதாக கூறி செல்போனை வாங்கி தப்பித்த சிறுவன் ...
தாயிடம் பேச போவதாக கூறி செல்போனை திருடிய சிறுவன்!!சரமாரியாக தாக்கிய பொதுமக்கள்...
Published on: 
Updated on: 
1 min read

தஞ்சையில் செல்போன் திருடிய சிறுவனை, பொதுமக்கள் சுற்றிவளைத்து தாக்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. 

தஞ்சை திருவள்ளூர் தியேட்டர் அருகே 15 வயது மதிக்கத்தக்க  சிறுவன் ஒருவன், அவ்வழியாக சென்ற நபரிடம் எனக்கு தாயிடம் பேச செல்போன் வேண்டும் என கேட்டுள்ளான். 

அதன்படி அந்த நபரும் செல்போனை கொடுத்ததாக தெரிகிறது. ஆனால் தாயை தொடர்பு கொள்வது போல் பாவனை செய்த அந்த சிறுவன், அங்கிருந்து செல்போனுடன் தப்பியுள்ளான். 

இதனை கண்ட பொதுமக்கள், அந்த சிறுவனை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். 

ஆனால், முன்னதாக பொதுமக்கள் சிலர் சிறுவனை சுற்றிவளைத்து சரமாரியாக தாக்கிய  காட்சி  அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அதன் வீடியோ காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com