புதுக்கோட்டையில் டாக்டர் வீடு தொடங்கி 3 வீடுகளில் நடந்த தொடர் திருட்டு!!

புதுக்கோட்டையில் அரசு மருத்துவர் வீட்டில் ஆரம்பித்து தொடர்ந்து மூன்று வீடுகளில் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டையில் டாக்டர் வீடு தொடங்கி 3 வீடுகளில் நடந்த தொடர் திருட்டு!!
Published on
Updated on
1 min read

பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்த முதல் திருட்டு?

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் சஞ்சீவ் நகரில் வசித்து வருபவர் அரசு மருத்துவர் ஆசிக் ஆசன் முகமது.  இவர் முக்கணாமலைப்ட்டி அரசு மருத்துமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். நேற்றிரவு சகோதிரிக்கு உடல் நலக்குறைவு காரணமாக அவரை பார்க்க மருத்துவர் ஆசிக் ஆசனின் புதுக்கோட்டை சென்றுள்ளார்.

இந்நிலையில், நள்ளிரவில் மருத்துவர் வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் பீரோலை உடைத்து அதில் இருந்த 200 சவரன் நகைகள் மற்றும் ஒரு பைக் கொள்ளையடித்து சென்றுள்ளனர். அதும் மருத்துவரின் வீடு காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்திலிருந்து 200 மீட்டர் தொலைவில் தான் அமைந்துள்ளது.

இரண்டாவது திருட்டு:

அது மட்டுமல்லாமல் மருத்துவர் வீட்டின் அருகில் வசித்து வரும் பீர் முகமது என்பவர் வீட்டில் இருசக்கர வாகனமும் திருடு சென்றுள்ளது.

மூன்றாவது திருட்டு:

இதனை அடுத்து வடுகர் தெருவில் வசிக்கும் ஆரோக்கியசாமி வீட்டில் 3.5 சவரன் நகையும் 20000 ஆயிரம் பணமும் கொள்ளை போயுள்ளது.

நான்காவது திருட்டு:

மேலும் இலுப்பூர் கண்ணாரத் தெருவில் வசித்து வரும் கிருஷ்ணமூர்த்தி வீட்டில் 5 சவரன் நகையும் 30000 பணமும் கொள்ளை போயுள்ளது. (Readers Mind Voice) போதும் போதும் எண்ணெங்க லிஸ்ட் ரொம்ப பெருசா போயிடு இருக்கு!!

போலீசார் வழக்கு பதிவு:

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கைரேகை நிபுணர்கள் உதவியுடன் சம்பவ வீட்டில் ஆய்வு செய்து வருகின்றனர். சம்பவ இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே சம்பவ இடத்தில் ஆய்வு செய்து வருகிறார். தொடர்ந்து அடுத்தடுத்து 4 இடங்களில் நடந்த திருட்டு சம்பவத்தால் இலுப்பூர் பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com