மாமியாரை மடக்கிப்போட்ட மருமகன்... மனைவியை விட்டுவிட்டு அத்தையுடன் தனிகுடித்தனம்

மாமியாரை மடக்கிப்போட்ட மருமகன்... மனைவியை விட்டுவிட்டு அத்தையுடன்  தனிகுடித்தனம்
Published on
Updated on
2 min read

காதலுக்கு கண் இல்லை என்று சொல்வார்கள் இந்த கால காதலுக்கு வயதும் இல்லை போலும் பொதுவாக தங்களுக்கு ஈடான அல்லது குறைந்த வயதுடைய பெண்ணை தான் ஆண்கள் காதலிப்பார்கள் ஆனால் சில ஆண்கள் கல்வி வளாகங்களில் பயிலும் சீனியர் பெண்கள் இவ்வளவு ஏன் ஆசிரியரையே காதலித்த சம்பவங்கள் கூட நம் நாட்டில் நடந்துள்ளது. அந்த வகையில் கட்டிய மனைவியின் தாயை காதலித்து கூட்டிக்கொண்டு ஓடிய நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வயதில் மூத்த பெண்களை காதலித்து திருமணம் செய்துகொள்வது என்பது அவ்வளவு பெரிய குற்றச்செயலாக கருதப்படுவதில்லை. சச்சின் முதல் பிரியங்கா சோப்ராவின் கணவர் வரை பெரும்பாலான பிரபலங்கள் தங்களை விட மூத்த பெண்களை மணந்தவர்கள் தான். திருமணம் என்றால் கூட பரவாயில்லை கள்ளக்காதல் அதுவும் மாமியாரையே என்றால் கேட்கவே கேவலமாக உள்ளது.

இந்த சம்பவம் மேற்கு வங்க மாநிலம் ஹவுரா மாவட்டம், ராம்புர்கஹத் பகுதியில் நடந்துள்ளது. கிருஷ்ண கோபால் தாஸ், என்பவர் பிரியங்கா தாஸ் என்ற பெண்ணை கடந்த 2016ம் ஆண்டு திருமணம் செய்துள்ளார்.

திருமணத்திற்கு பின்பு இருவம் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் கிருஷ்ணகோபால் தாஸ், பல முறை பிரியங்கா தாஸிடம் சண்டையிடுவது அடித்து துன்புறுத்துவது போன்ற செயல்களின் ஈடுபட்டு வந்துள்ளார்.

இதனால் இவர்களின் பஞ்சாயத்து இரு குடும்பங்களிடையே பேசி தீர்க்கப்பட்டு கிருஷ்ண கோபால் தாஸ் வன்முறையில் ஈடுபடாமல் இருப்பதை உறுதி செய்வதற்கு அவரின் மனைவி வீட்டில் சிறிது காலம் தங்கியிருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். அதனால்  வீட்டோடு மாப்பிள்ளையாக பிரியங்கா தாஸின் பெற்றோர் வீட்டிலேயே தங்கியிருந்தார். 

இப்படியே காலம் சென்றுக்கொண்டிருக்க வீட்டோடு மாப்பிளையாய் இருப்பதற்கு முற்றிலும் பழகிக்கொண்டுவிட்டார். கிருஷ்ண கோபால் தாஸ். சொந்த வீடிற்கு செல்லலாம் என்று மனைவி கூப்பிட்டாலும் வரமால் இதுவே நன்றாக சொகுசாக தானே உள்ளது என்று மறுத்து வந்திருக்கிறார்.

பிரியங்கா தாஸும் இதனை பெருசாக கண்டுகொள்ளாத நிலையில் கணவர், மனைவியின் தாய் ஷிபாலி தாஸ் என்பவரிடமே மறைமுகமாக தனது காமலீலைகளை துவங்கியுள்ளார்.

பிரியங்கா தாஸ் வீட்டில் இல்லாத சமயத்தில் இருவரும் நெருங்கி பேசி பழகி வந்துள்ளனர். இந்த நெருக்கம் பிற்காலத்தில் காதலாக உருமாறியது, மாமியாருக்கும் மருமகனுக்கும் இடையேயான இந்த தொடர்பு. 

இந்நிலையில் அவர்கள் வாழ்க்கையில் கிருஷ்ண கோபால் தாஸ் சில காலம் தன் மனைவி வீட்டில் சென்று இருக்கும் நிலை ஏற்பட்டது. வீட்டோடு மாப்பிள்ளையாக பிரியங்கா தாஸின் பெற்றோர் வீட்டிலேயே இருந்தார். அப்பொழுது கிருஷ்ணா கோபால் தாஸ்க்கும், அவரது மாமியார் அதாவது பிரியங்கா தாஸின் தாயார் ஷிபாலி தாஸ் என்பவருக்கு கள்ள உறவு ஏற்பட்டுள்ளது. மனைவிக்கு தெரியாமல் இந்த உறவு சுமார் 3 ஆண்டுகள் வரை சென்றுள்ளது. 

இருவரின் நடத்தையில் தெரிந்த மாறுதல்களை கவனிக்க தொடங்கிய பிரியங்கா தாஸ் திடீரென ஒருநாள்  இவர்கள் இருவருக்கு இடையேயான  விவகாரத்தை கண்டுபிடித்துவிட்டார். இதனால் குடும்பத்தில் வாக்குவாதம் முற்றி கலவரம் வெடிக்க தொடங்கியது. எனவே பிரியங்கா தாஸின் தாய் ஷிபானி தாஸ், தன் கள்ளகாதலனும் மருமகனுமாகிய கிருஷ்ண கோபால் தாஸை இழுத்துக்கொண்டு ஓடி தனியாக குடும்பம் நடத்த துவங்கிவிட்டார்.

இதனால் கடுப்பான பிரியங்கா தாஸ் தன் கணவனை கண்டுபிடித்து தன்னிடம் ஒப்படைக்குமாறும் அவரின் தந்தையுடன் சேர்ந்து போலீசில் புகார் அளித்துள்ளனர். போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாமியாரே மருமகனை இழுத்துக்கொண்டு ஓடிய குடும்பம் நடத்தி வரும் சம்பவம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலா பரவி வருகிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com