
திருப்பத்தூர் மாவட்டம் கொண்டநாயக்கன் பட்டியை சேர்ந்த நரசிம்மன் அதே பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவரின் இரண்டாவது மனைவியின் மகளான அனிதா என்பவரை திருமணம் செய்துள்ளார்.
இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ராஜா விற்ற நிலத்தை வேறோரு நபரிடம் இருந்து நரசிம்மன் வாங்கியுள்ளார். அந்த இடத்தை தனது பெயரில் கிரயம் செய்து கொடுக்கும் படி ராஜா நரசிம்மனை கேட்டு மிரட்டி வந்துள்ளார். அவர் கிரயம் செய்து கொடுக்க மறுத்ததை அடுத்து நரசிம்மனை குடும்பத்துடன் கொலை செய்து விட வேண்டும் என முடிவெடுத்துள்ளார்.
தனது முதல் மனைவியின் மகன்கள் இரண்டு பேருடன் கூட்டுச் சேர்ந்து நரசிம்மன் வீட்டில் நாட்டு வெடிக்குண்டு வைக்கும் போது மூவரும் கையும் களவுமாக சிக்கி சிறையிலடைக்கப்பட்டனர். இந்நிலையில் மூவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.