சமையல் மாஸ்டரின் இருசக்கர வாகனத்தை திருடி சென்ற டிப்டாப் ஆசாமி.. சிசிடிவி காட்சிகள்!!

நாகையில் தனியார்  திருமண மண்டபத்திற்கு சமையல் செய்ய வந்த சமையல் மாஸ்டரின் இருசக்கர வாகனத்தை டிப்டாப் ஆசாமி பூட்டை உடைத்து திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
சமையல் மாஸ்டரின் இருசக்கர வாகனத்தை திருடி சென்ற டிப்டாப் ஆசாமி.. சிசிடிவி காட்சிகள்!!
Published on
Updated on
1 min read

நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கலை சேர்ந்தவர் சமையல் மாஸ்டர் பிரபு. இவர் கடந்த ஆறாம் தேதி நாகப்பட்டினத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்திற்கு திருமண நிகழ்ச்சிக்கு சமையல் செய்ய தனது இருசக்கர வாகனம் splendor plus ல்சென்றுள்ளார்.

திருமண மண்டபத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரின் இருசக்கர வாகனத்தை சிவப்பு சட்டை அணிந்த டிப்டாப் ஆசாமி லாவகமாக இருசக்கர வாகனத்தின் பூட்டை உடைத்து எடுத்து சென்றுள்ளார்.

இதனை அடுத்து இருசக்கர வாகனத்தை நிறுத்திய இடத்தைப் பார்த்தபோது திருடு போகியுள்ளதை கண்டு  அதிர்ச்சி அடைந்த பிரபு  திருமண மண்டபத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியில் பதிவான காட்சிகளைக் கொண்டு நாகப்பட்டினம் நகர காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com