சிக்கன் கிரேவியை சுட வைத்து சாப்பிட்டவர் பலி

உணவகத்தில் முந்தைய நாள் வாங்கிய கிரேவியை பிரிட்ஜில் வைத்து மறுநாள் சுட வைத்து சாப்பிட்டவருக்கு நேர்ந்த கதி.
சிக்கன் கிரேவியை சுட வைத்து சாப்பிட்டவர் பலி
Published on
Updated on
2 min read

ஆனந்தராஜை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாய் கூறினர். இதுகுறித்து உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, இதுவரை உயிரிழந்த ஆனந்தராஜின் தரப்பில் இருந்து எந்த புகாரும் வரவில்லை என தெரிவித்தனர்.

தற்போதைக்கு சந்தேக மரணம் என்றே கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முந்தைய நாள் வாங்கிய சிக்கன் கிரேவியை பிரிட்ஜில் வைத்து மறுநாள் சுட வைத்து சாப்பிட்டவர் உயிரிழந்த சம்பவம் அசைவப் பிரியர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.மதுரை மாவட்டம் கோசாகுளம் மேலப்பனங்காடியை அடுத்த ராஜராஜேஸ்வரி நகரில் வசித்து வந்தவர் ஆனந்தராஜ். 27 வயதான இவருக்கு சௌமியா என்ற மனைவியும், 7 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உண்டு.

இந்நிலையில் கடந்த 26-ம் தேதியன்று இரவில் மேலப்பனங்காடியில் உள்ள உணவகத்தில் இருந்து செட்டிநாடு சிக்கன் கிரேவியை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்தார் ஆனந்தராஜ்.

இதையடுத்து பார்சல் வீட்டுக்கு வந்ததைத் தொடர்ந்து ஆனந்தராஜ், சௌமியா 7 வயது குழந்தை ஆகியோர் சாப்பிட்டு முடித்தனர். அப்போது மீதம் இருந்த சிக்கன் கிரேவியை எடுத்து பிரிட்ஜில் வைத்தவர் மறுநாள் காலையில் சுட வைத்து சாப்பிட்டுள்ளார்.

இதையடுத்து ஆனந்தராஜூக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. உடனே பீபிகுளம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துக் கொண்டவர் 28-ம் தேதியன்று வீடு திரும்பினார்.

ஆனாலும் வயிற்றுப்போக்கு சரியாகாததால் அவதியடைந்த ஆனந்தராஜ், திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து சௌமியா ஆம்புலன்ஸ் மூலம் ஆனந்தராஜை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

அங்கு ஆனந்தராஜை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாய் கூறினர். இதுகுறித்து உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, இதுவரை உயிரிழந்த ஆனந்தராஜின் தரப்பில் இருந்து எந்த புகாரும் வரவில்லை என தெரிவித்தனர்.

தற்போதைக்கு சந்தேக மரணம் என்றே கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முந்தைய நாள் வாங்கிய சிக்கன் கிரேவியை பிரிட்ஜில் வைத்து மறுநாள் சுட வைத்து சாப்பிட்டவர் உயிரிழந்த சம்பவம் அசைவப் பிரியர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com