
நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை அருகே நண்பனை மாடியில் இருந்து கீழே தள்ளி கொடூரமாக கொலை செய்த நான்கு பேரை காவல்துறையினா் கைது செய்தனா்.
பாளையங்கோட்டை அருகே திருமால் நகரைச் சேர்ந்தவர் முத்து ஹரி. இவரது நண்பர்களான ஜோஸ் செல்வராஜ், செல்வகுமார் உள்ளிட்ட நான்கு பேர் முத்து ஹரி கீழே விழுந்து விட்டதாக கூறி பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனா். பின்னா் அவா் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்நிலையில் முத்து ஹரி சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது குடும்பத்தினா் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் காவல்துறையினா் 4 பேரை அழைத்து விசாரணை மேற்கொண்டனா். அப்போது குடிப்போதையில், முத்து ஹரியை மடியில் இருந்து கீழே தள்ளியதாக ஒப்புக்கொண்டனா். இது தொடா்பாக 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.