
புதுச்சேரி திருவாண்டார்கோயில் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை அப்பகுதி பெட்ரோல் பங்கில் பணி புரிந்து வந்த தினேஷ் என்பவர் காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி பழகி உள்ளார்.
பின்னர் இவரிடையே காதல் மலர, தனது நண்பர் வீட்டிற்கு சிறுமியை அழைத்து சென்றுள்ளார் தினேஷ் .
திருக்கனூர் பகுதியில் உள்ள நண்பர் வீட்டில் தினேஷை தவிர நான்கு நண்பர்கள் இருந்துள்ளனர். இதனையடுத்து தினேஷ் நண்பர்களான திவ்யாநாதன் பிரசாத், ரஞ்சித் ஆகியோர் சிறுமியை கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு கொடூரமாக சித்ரவதை செய்துள்ளனர்.
இது குறித்து சிறுமியின் பெற்றோர் திருக்கனூர் காவல் நிலையத்தில் அளித்த புகார் அளித்ததையடுத்து போலிசார் நான்கு பேரையும் கைது செய்தனர். அவர்கள் மீது போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்