12ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞர்....!!

12ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞர்....!!

அரசுப் பள்ளி 12ம் வகுப்பு மாணவியை ஆறு மாதம் கர்ப்பமாக்கிய இளைஞரை கைது செய்து சிறையில் போலீசார் அடைத்துள்ளனர். 

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள சம்பட்டி விடுதி பகுதியைச் சேர்ந்தவர் 12ம் வகுப்பு மாணவி. இவர் தினமும் சம்பட்டி விடுதியில் இருந்து ஆலங்குடிக்கு வந்து அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார்.  இவ்வாறு பள்ளிக்கு வந்து செல்லும் போது ஊத்தக்காட்டைச் சேர்ந்த முருகேசன் மகன் மனோஜ் என்ற இளைஞருக்கும் மாணவிக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாற, இருவரும் சேர்ந்து பல்வேறு இடங்களில் சுற்றி உள்ளனர்.  கடந்த ஆறு மாதத்திற்கு முன்னர் மாணவியை அழைத்து சென்று பொற்பனைக்கோட்டை தைல மரக்காட்டில் உடலுறவு கொண்டதாகத் தெரிகிறது.  அந்த சூழலில் மாணவிக்கு தொடர்ச்சியாக வயிற்று வரி ஏற்படவே, அவர் தனியாக ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார்.  அப்போது அவரை சோதித்த மருத்துவர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதாகக் கூறி புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இது தொடர்பாக தகவல் கிடைத்த மாணவியின் உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் மாணவியை அழைத்து வந்து ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மனோஜ் மீது புகாரளித்தனர்.  இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் மனோஜை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து, அவரை புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புதுக்கோட்டை சிறையில்  சிறையில் அடைத்தனர்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com