கோயில் கோபுர கலசம் திருட்டு - போலீசார் விசாரணை...

கோயில் கோபுர கலசம் திருட்டு - போலீசார் விசாரணை...

புதுச்சேரி | நெல்லித்தோப்பு கொசப்பாளையம் பகுதியில் அமைந்துள்ளது. ஸ்ரீ முத்து மாரியம்மன் கோயில் இதன் நிர்வாகிகளில் ஒருவரான உதயா இவர் நேற்று காலை வழக்கம் போல் கோயில்க்கு சென்ற போது கோயிலின் கோபுரத்தின் மீது இருந்த கலசம் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைத்தவர்.

இது தொடர்புக்  உருளையான்பேட்டைகாவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து  கோயில் அமைந்திருக்கும் தெருவில் பொருத்தப்பட்டிருந்த  சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதில் நள்ளிரவு சுமார் 1:30 மணியளவில் இரண்டு மர்ம நபர்கள் மீன் ஏற்றிச்செல்லும் தட்டு வண்டியில் கோயில் உள்ள தெருவில் செல்வதும்  பின்னர் கோயில் கோபுர கலசத்தை தட்டுவண்டியில் திருடிக்கொண்டு அதே வீதி வழியாக வெளியேறுவதும் பதிவாகியிருந்தது.

இதனைத் தொடர்ந்து கலசத்தை திருடிய மர்ம நபர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com