
தேனி மாவட்டம், போடி கரட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் ஆண்டிவேலு. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்த ராணி என்ற பெண்ணுக்கும் திருமணம் முடிந்து வாழ்ந்து வந்த நிலையில் ஆண்டிவேலு பாலியல் குற்றத்திற்காக சிறை சென்றுள்ளார். எனவே ராணி தனியாக வசித்து வந்துள்ளார். அப்போது ஆண்டிவேலுவின் நண்பரான பாலமுருகன் ஆனந்த ராணிக்கு உதவியாக இருந்துள்ளார். இந்நிலையில் பாமுருகனுக்கும் ஆனந்தராணிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
பின்னர் இருவரும் தனியாக வீடு எடுத்து வசித்து வந்துள்ளனர். கணவன் மனைவி போல வாழ்ந்து வந்த இருவருக்கும் குழந்தை பிறந்த நிலையில் குடும்பமாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் இரண்டு வருடம் கழித்து ஆண்டிவேலு சிறையில் இருந்து வெளியில் வந்துள்ளார். அப்போது இரண்டு வருடமாக ஆண்டி வேலு சிறை சென்ற நிலையில் மனைவி ஆனந்த ராணி மற்றும் நண்பர் பாலமுருகன் இடையே உறவு ஏற்பட்டு குழந்தையும் பெற்றுள்ளனர் என்பதை அறிந்து பாலமுருகன் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு தனது மனைவியை பார்த்து தன்னுடன் வாழ வருமாறு அழைத்துள்ளார்.
பின்னர் பாலமுருகனிடம் சென்று ஆண்டுவேலு “நீங்கள் பெற்ற குழந்தையை மட்டும் வைத்துக் கொள்ளுங்கள் எனது மனைவியை என்னிடம் அனுப்புங்கள்” என கேட்டுள்ளார். அப்போதும் பாலமுருகன் ராணியை ஆண்டிவேலுவுடன் அனுப்பாமல் இருந்துள்ளார். எனவே நேற்று முன் தினம் பலமுருகனுக்கும் ஆண்டிவேலுவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது, இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இருவரையும் பேசி சமாதானம் செய்து அனுப்பிவைத்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று இரவு மீண்டும் போடி கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் அருகே உள்ள தனது நண்பர் பாலமுருகனின் வீட்டிற்கு சென்ற ஆண்டி வேலு நண்பனின் தந்தை நடராஜனிடம் தனது மனைவியைக் கேட்டு சண்டை போட்டு நடராஜை தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பாலமுருகன் வீட்டில் வைத்திருந்த கத்தியை எடுத்து வந்து நண்பன் ஆண்டி வேலுவை புற முதுகில் வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ரத்த வெள்ளத்தில் மிதந்து கீழே விழுந்த ஆண்டு வேலு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போடி நகர் காவல் துறையினர் ஆண்டிவேலுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்த நிலையில் வழக்குப்பதிவு செய்து பாலமுருகனை கைது செய்தனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.