“காட்டுக்குள் கேட்ட அலறல் சத்தம்” - தலை நசுங்கிய நிலையில் கிடந்த உடல்.. நள்ளிரவில் நடந்த கோரம்!

முருகனின் உடலை பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்
police investigation
police investigation
Published on
Updated on
1 min read

தேனி கதிர் நரசிங்க புரத்தை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி முருகன் (60), இவர் ஆண்டிப்பட்டி அருகே  கன்னியப்பிள்ளபட்டி சாலையில் அமைந்திருக்கும், கோபால்சாமி கோயிலுக்கு அருகே உள்ள காட்டுப்பகுதியில், மர்ம நபர்களால் தலையில் கல்லை போட்டு நேற்று இரவு கொலை செய்யப்பட்டிருக்கிறார்.

காலையில் காட்டுப்பகுதி வழியாக  சென்ற பொதுமக்கள் முருகனின் உடலை பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதை அறிந்த போலீசார், காட்டுப் பகுதிக்கு சென்று முருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனை அடுத்து முருகனின் சடலத்திற்கு, அருகில் இருந்த பாதி எரிந்த இருசக்கர வாகனத்தை கவனித்த போலீசார். அந்த வாகனத்தை குறித்து தகவல் சேகரித்து வாகனத்தின் உரிமையாளரிடம் விசாரித்துள்ளனர்.

விசாரணையில் வாகன உரிமையாளர், இரவு வழக்கம் போல் வேலையை  முடித்து விட்டு அவ்வழியே சென்ற போது, இரண்டு மர்ம நபர்கள் அரிவாளை காட்டி மிரட்டி, “என்னுடைய வாகனத்தையும் செல்போனையும் பறித்து கொண்டு. எனக்கு தங்களிடம்  இருந்த அரிவாளால் என்னை காயப்படுத்தி விட்டு சென்றனர்” என வாக்குமூலம் அளித்துள்ளார்.

தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், சிவபிரசாத் முருகன் கொலை குறித்து, சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றார். கொலை செய்யப்பட்ட முருகனுக்கு வண்டி ஓட்ட தெரியாது. என்பதும் 5 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து கன்னியப்பிள்ளபட்டி, பகுதிக்கு அவர் எப்படி வந்தார் என்பதை குறித்தும் முதற்கட்டமாக  போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com