நீங்க செத்த நாங்க பொறுப்பா - "எங்களுக்கும் அதுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல" - ஆன்லைன் விளையாட்டு நிறுவனம் தரப்பில் பதில்

தற்கொலைக்கு பல காரணங்கள் இருக்கும் போது, ஆன்லைனில் விளையாடுவதால் தான் தற்கொலை செய்து கொள்வதாக கூறுவதை ஏற்க முடியாது...
we are not responsible for suicide online games notice
we are not responsible for suicide online games notice Admin
Published on
Updated on
1 min read

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஆதார் இணைப்பை கட்டாயமாக்கியும், நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை யாரையும் விளையாட அனுமதிக்க கூடாது என கட்டுப்பாடு விதித்தும் கொண்டு வரப்பட்ட விதிகளை எதிர்த்து ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தாக்கல் செய்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் கே.ராஜசேகர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஆன்லைன் நிறுவனம் தரப்பில், ஆன்லைன் விளையாட்டுகள் அடிமைப்படுத்தும் என விதியில் குறிப்பிட்டுள்ளது ஏற்புடையது அல்ல. தற்கொலை சம்பவங்களுக்கு பல காரணங்கள் உள்ள நிலையில், ஆன்லைன் விளையாட்டில் பணம் இழந்ததற்காக மட்டுமே தற்கொலை செய்து கொண்டதாக தமிழக அரசு கூறுவதை ஏற்க முடியாது என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, தமிழக அரசு தரப்பு வாதத்திற்காக வழக்கு விசாரணையை ஏப்ரல் 4ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com