ரீல்ஸால் சிக்கிய வழிப்பறி திருடன்... போலீசார் வலைவீச்சு...

வழிப்பறியில் ஈடுபட்டு கூலாக கஞ்சா போதையில் பட்டாகத்தியால் ரீல்ஸ் செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ரீல்ஸால் சிக்கிய வழிப்பறி திருடன்... போலீசார் வலைவீச்சு...
Published on
Updated on
1 min read

சென்னை: அயனாவரம் ஏகாங்கிபுரம் பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் விக்ரம் (19). இவர் கடந்த 20 ஆம் தேதி தனது நண்பருடன் பெரம்பூர் முரசொலி மாறன் பூங்கா வழியாக பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை 4 பேர் கொண்ட கஞ்சா கும்பல் ஒன்று வழிமறித்து கத்தியால் தாக்கி 1 சவரன் நகை, புல்லட் ஆகியவற்றை பறித்து கொண்டு தப்பி சென்றது. 

இதில் காயமடைந்த விக்ரம் அவரது நண்பர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். பின்னர் இந்த வழிப்பறி சம்பவம் குறித்து விக்ரம் ஐசிஎப் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையர்களை தேடிவந்தனர். மேலும் கொள்ளையர்களை அடையாளம் காணமுடியாமல் போலீசார் திணறி வந்தனர்.

இந்நிலையில் நேற்று முந்தினம் இன்ஸ்டாகிராமில் இளைஞர்கள் நான்கு பேர் கஞ்சா போதையில் பட்டாக்கத்தியுடன் கானா பாடலுக்கு ஆட்டம் போட்ட வீடியோ வைரலானது. இது குறித்து போலீசாருக்கு புகார் வந்ததையடுத்து போலீசார் வீடியோ வெளியிட்ட நபர்களை அடையாளம் கண்டு பிடித்து இருவரை கைது செய்து விசாரணை நடத்தினர். 

முதற்கட்ட விசாரணையில் பெரம்பூரை சேர்ந்த இளமாறன்(19), ஆனந்தகுமார்@மூலை(23) என்பது தெரியவந்தது. மேலும் கைதான இளமாறன் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து விக்ரம் என்ற வாலிபரை தாக்கி செயின், புல்லட் பறித்து சென்றது தெரியவந்தது.  லோக்கல் ரவுடியான இளமாறன் மீது கொலைமிரட்டல், வழிப்பறி, உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது.  

இதனையடுத்து போலீசார் இருவரை கைது செய்து புல்லட், கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் பட்டாகத்தியால் ரீல்ஸ் செய்து தெரியாமல் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்ததாகவும், இனி அப்படி போட மாட்டேன் என கைதான இளமாறன் வீடியோவில் பேசி வெளியிட்டுள்ளார். மேலும் தலைமறைவாக உள்ள இருவரை போலீசார் தேடிவருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com