திருநெல்வேலி மாவட்டம், பாலாமடை பகுதியைச் சேர்ந்தவர் சுதாகர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 26 வயதுடைய பேச்சியம்மாள் என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணமான நிலையில் ஒரு ஆண் மற்றும் பெண் என இரண்டு குழந்தைகளை உள்ளதாக சொல்லப்படுகிறது. சுதாகர் கூலி தொழில் செய்து வந்த நிலையில் இவரது மனைவி பேச்சியம்மாள் தி சென்னை சில்க்ஸ் கடையில் பணியாற்றி வந்திருக்கிறார். இதற்கிடையில் மனைவியின் நடத்தையில் சுதாகருக்கு சந்தேகம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.
எனவே இதனை காரணமாக கடந்த சில மாதங்களாக கணவன் மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு நடந்து வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பேச்சியம்மாள் கணவனை பிரிந்து தனது குழந்தைகளுடன் அவரது தாய் வீட்டில் வசித்து வந்திருக்கிறார். இருப்பினும் தொடர்ந்து வேலைக்கு சென்று வந்த நிலையில் எப்போது பேச்சியம்மாள் வேறு சிலருடன் போனில் பேசிக்கொண்டிருந்ததாக சொல்லப்படும் நிலையில் இதை கேட்டு ஆத்திரமடைந்த சுதாகர் இது குறித்து மீண்டும் மனைவியிடம் தகராறு செய்து வந்திருக்கிறார்.
இந்நிலையில் வழக்கம் போல நேற்று காலை பேச்சியம்மாள் அவரது தாய் வீட்டில் இருந்து அவர் வேலை செய்யும் தி சென்னை சில்க்ஸ் கடைக்கு செல்ல நெல்லை பேருந்து நிலையத்திற்கு சென்றிருந்த நிலையில் பேருந்திற்காக காத்துக் கொண்டு இருந்துள்ளார். அப்போது அங்கு சென்ற சுதாகர் திடீரென அவரது கையில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து பேச்சியம்மாள் நோக்கி செல்ல இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பேச்சியம்மாள் ஓட்டம் பிடித்துள்ளார். இருப்பினும் விடாத சுதாகரும் பேச்சியம்மாளை துரத்தி சென்று ஓட ஓட வெட்டி படுகொலை செய்தார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
இதற்கிடையில் நெல்லை சந்திப்பு காவல் நிலையத்திற்கு சென்ற சுதாகர் அங்கு போலீசாரிடம் சரணடைந்துள்ளார். பின்னர் கொலை செய்யப்பட்ட பேச்சிமாளின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக வெட்டி கொலை செய்ததாக சுதாகர் தெரிவித்துள்ளார். மக்கள் அதிகம் நடமாடும் பேருந்து நிலையத்தில் கணவன் மனைவியை ஓட ஓட வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.