“திருவள்ளூரில் மீண்டும் கூட்டு பாலியல் வன்கொடுமை” - வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் அத்துமீறிய மூன்று வாலிபர்கள்!

நேற்று முன்தினம் இரவு கமலாவின் காதலன் வெளியில் சென்றிருந்த நிலையில் அவர் மட்டும் வீட்டில் தனியாக...
“திருவள்ளூரில் மீண்டும் கூட்டு பாலியல் வன்கொடுமை” - வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் அத்துமீறிய மூன்று வாலிபர்கள்!
Published on
Updated on
1 min read

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த மேல்முதலம்பேடு கிராமத்தில் வசித்து வந்தவர் 42 வயது பெண் கமலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவருக்கு திருமணமாகி கருது வேறுபாடு காரணமாக கடந்த 10 ஆண்டுகளாக கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இதற்கிடையில் அதே பகுதியை சேர்ந்த வேறு ஒருவருடன் கமலாவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் ஈருவரும் தொடர்ந்து பழகி வந்த நிலையில் அவர்களது பழக்கமானது திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியுள்ளது.

பின்னர் இருவரும் தனியாக வீடு எடுத்து கணவன் மனைவி போல வாழ்ந்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த 27 வயதுடைய ரஞ்சித், 25 வயதுடைய முத்துகிருஷ்ணன் மற்றும் 20 வயதுடைய துளசி ராமன் ஆகியோர் கமலா மற்றும் அவரது காதலனுடன் அவ்வப்போது பேசி பழகி வந்திருக்கின்றனர். நேற்று முன்தினம் இரவு கமலாவின் காதலன் வெளியில் சென்றிருந்த நிலையில் அவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்திருக்கிறார்.

அப்போது அவரது வீட்டிற்குள் சென்ற ரஞ்சித் மற்றும் அவரது நண்பர்கள் இருவர் கமலாவை வலுக்கட்டமாக பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றிருக்கின்றனர். பின்னர் கமலா தனது காதலன் உதவியுடன் கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில் நடந்தது குறித்து புகார் அளித்தார். கமலாவின் புகாரை ஏற்று வழக்குப்பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

அதன்படி நேற்று காலை அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகள் மற்றும் குற்றவாளிகளின் செல்போன் எண்களை வைத்து பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த மேல்முதலம்பேடு சேர்ந்த ரஞ்சித் 27, முத்துகிருஷ்ணன் 25, துளசிராமன் 20 ஆகிய மூவரை கைது செய்து கும்மிடிப்பூண்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் மத்திய சிறையில் அடைத்தனர். வீட்டில் தனியாக இருந்த பெண்ணை மூன்று வாலிபர்கள் வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com