
திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தட்டான்குளம் ரோடு மண்டல அலுவலகம் எதிரில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் 19 வயதுடைய நீரலாகுமார். இவர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர். இவர் அறையில் தங்கியிருந்த மற்ற நான்கு பேரும் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என சொல்லப்படுகிறது. நீராலாகுமார் மற்றும் அவரது நண்பர்கள் அனைவரும் அருகில் உள்ள அட்டை கம்பெனியில் பணிபுரிந்து வந்த நிலையில்,கம்பெனியில் ஆயுத பூஜை விழா கொண்டாடப்பட்டு கம்பெனி மூலம் ஒவ்வொருவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது.
பின்னர் பரிசுகளை வாங்கி கொண்டு வீட்டிற்கு வந்த தொழிலாளர்கள் அந்த பணத்தை வைத்து கொண்டு மது வாங்கி ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது நான்கு பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒருவருக்கொருவர் மாறி மாறி பேசியதில் வாக்குவாதம் முற்றி நிலையில் மற்ற நான்கு நண்பர்களும் சேர்ந்து நீரலாகுமாரின் மண்டையில் அடித்து, பீர் பாட்டிலை உடைத்து முகத்தில் குத்தி உள்ளனர். இதனால் நீரலாகுமாரின் மண்டை உடைந்து ரத்தம் வெளியேறியுள்ளது இதனை பார்த்து அதிர்ச்சியடைந்தவர்கள் அறையிலிருந்து வெளியேறி தப்பி சென்றுள்ளனர்.
பின்னர் நீண்ட நேரமாக அறை கதவு திறந்திருப்பதை கவனித்த அப்பகுதி மக்கள் அறைக்குள் சென்று பார்த்துள்ளனர். அங்கு நீரலாகுமார் ரத்தவெள்ளத்தில் மிதந்து இறந்து கிடந்த நிலையில் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் நீரலாகுமாரின் உடலை கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
விசாரணையில் நீரலாகுமாரின் நண்பர்கள் கொலை செய்ததை அறிந்த போலீசார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து அவர்களை தேடிவந்த நிலையில், மாதவரம் ஆந்திர மாடி பேருந்து நிலையத்திலிருந்து, விழுப்புரம் செல்லும் பஸ்ஸில் ஏறி தப்பிக்க முயன்றவர்களை போலீசார் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சங்காரானம் (வயது 20) பபித்ரா (வயது 19) திரிநாத் (வயது 19 ) மற்றும் 17 வயதுடைய சிறுவனையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.