இந்த சம்பவம் வழக்கறிஞர்கள் மத்தியில் மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது!!!

இந்த சம்பவம் வழக்கறிஞர்கள் மத்தியில் மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது!!!

சைதாப்பேட்டை வழக்கறிஞர் ஜெய்கணேஷ் படுகொலை கண்டித்து சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது

போராட்டம்:

சைதாப்பேட்டை வழக்கறிஞர் ஜெய் கணேசன் படு கொலை செய்யப்பட்டதை கண்டித்து சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் தலைவர் ஜி மோகனகிருஷ்ணன் தலைமையில் 200க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் சென்னை உயர்நீதிமன்ற வாயிலில் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அச்சம்:

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மோகனகிருஷ்ணன், கடந்த சனிக்கிழமை இரவு சைதாப்பேட்டை செயற்குழு உறுப்பினர் ஜெய்கணேஷ் அவர்கள் அவரது வீட்டு வாசலில் மிக கொடூரமாக கொலை செய்யப்பட்டு உயிரிழந்து உள்ளார் எனவும் இந்த சம்பவம் வழக்கறிஞர்கள் மத்தியில் மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது எனவும் கூறினார். 

குறைவான பாதுகாப்பு:

மேலும் சமீப காலமாக வழக்கறிஞர்கள் கொலை செய்யப்பட்டு வருகின்றனர் எனவும் இதை பலமுறை கண்டித்து உள்ளோம் எனவும் கூறிய மோகனகிருஷ்ணன் வழக்கறிஞர்களுக்கு சமீப காலமாக பாதுகாப்பு குறைவாக உள்ளது எனவும் ஜெய்கணேஷ் அவரது பணியை மிகச் சிறப்பாக செய்து வந்த இளம் வழக்கறிஞர் எனவும் தெரிவித்தார்.

கோரிக்கை:

கொலை செய்யப்பட்ட ஜெய்கணேசின் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் அப்படி கைது செய்யப்பட்ட நபர்கள் மீது உடனடியாக குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்து விரைவு நீதிமன்றத்தில் உடனடியாக வழக்கை நடத்த வேண்டும் என்று தங்களது கோரிக்கையாக முன் வைக்கிறோம் என்றும் அவர் கூறினார்.  அதைத்தொடர்ந்து வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டமானது ராஜஸ்தானில் உள்ளது எனவும் அதேபோன்று தமிழ்நாட்டில் இந்த சட்டத்தை கொண்டு வர வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

போக்குவரத்து நெரிசல்:

பின்னர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்களை காவல்துறையினர் கைது செய்து பேருந்தில் அழைத்து சென்றனர்.இந்த சாலை மறியல் போராட்டம் காரணமாக அரைமணி நேரத்திற்கும் மேலாக என்.எஸ்.சி.போஸ் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com